தேசிய கராத்தே போட்டியில் அரசு பள்ளி மாணவி சாதனை.
சாய்னா ஜெட்லி.
தேசிய அளவிலான கராத்தே கட்டா பிரிவு போட்டியில் மாநகராட்சி நடுநிலைப் பள்ளி மாணவி மூன்றாம் பரிசு பெற்று வெற்றி பெற்றார்.
திருச்சி கோட்டை பெரிய கடை வீதி பகுதியில் உள்ளகோட்டை மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வருபவர் சாய்னா ஜெட்லி. இவர் 23 உலக சாதனைகளையும் கின்னஸ் உலக சாதனையும் பெற்றவர். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சித் தலைவர் மா.பிரதிப்குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன் , கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ இனிகோ இருதயராஜ் , துணை மேயர் திவ்யா தனக்கொடி, பாரதிதாசன் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் டாக்டர் செல்வம் ஆகியோரை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியிடம் பாரத் விபூஷன் விருது பெற்றுள்ளார். இவர் ஜேம்ஸ் மெட்ரிக் பள்ளியில் நடந்த தேசிய அளவிலான கராத்தே போட்டியில் கட்டா பிரிவில் மூன்றாம் பரிசு வெற்றி பெற்று ள்ளார். அவரை பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் கராத்தே பயிற்சியாளர் பிரபல டேக்வாண்டோ கிராண்ட் மாஸ்டர் கின்னஸ் உலக சாதனையாளர் டாக்டர் டிராகன் ஜெட்லி உள்பட பலர் பாராட்டினர்.
Next Story