மாநில அளவிலான கடற்கரை கைப்பந்து போட்டிக்கு அரசு பள்ளி மாணவிகள் தேர்வு
மாநில அளவிலான கடற்கரை கைப்பந்து போட்டிக்கு அரசு பள்ளி மாணவிகள் தேர்வு
மாநில அளவிலான கடற்கரை கைப்பந்து போட்டிக்கு மயிலாடுதுறை கோமல் அரசு பள்ளி மாணவிகள் தேர்வு
மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலம் தாலுகா, கோமல் அரசினர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மாவட்டக் கடற்கரை கைப்பந்து போட்டியில் முதலிடம் பெற்று, தங்கப்பதக்கத்தை வென்று மாநிலப் போட்டிக்கு தகுதி பெள்றனர். மாவட்ட அளவிலான கடற்கரை கைப்பந்து போட்டி, சீர்காழி அருகே திருமுல்லைவாசல் கடற்கரையில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற, கோமல் பள்ளியில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவிகள் பிரின்ஸியா, வைஷ்ணவி, மாவட்டத்தில் முதலிடம் பிடித்து மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இதே போன்று சூப்பர் சீனியர் பிரிவில், மாணவிகள் ரேணுகா பரமேஸ்வரி, கவிதர்ஷ்னி இரண்டாம் இடமும், ஜீனியர் பிரிவில் ஆகாஷ், மதன்ராஜ் மூன்றாம் இடமும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ள மாணவிகளை, பள்ளியின் தலைமையாசிரியர் பாஸ்கர், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ராகவன், பொருளாளர் ரவீந்திரபாரதி, முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் சுகுமார், பள்ளி மேலாண்மைக் குழு தலைவர் வேம்பு , பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் ரூபி மெட்டில்டா, காசிராஜா பாராட்டுதலை தெரிவித்தனர். உதவி தலைமையாசிரியர் சாந்தி, பிரபாகரன், சந்திரமோகன், ராமசந்திரன் உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டுதலை தெரிவித்தனர்.
Next Story