முதலமைச்சர் திறனாய்வு தேர்வில் அரசு பள்ளி மாணவிகள் வெற்றி 

முதலமைச்சர் திறனாய்வு தேர்வில் பேராவூரணி அரசுப் பள்ளி மாணவிகள் 2 பேர் வெற்றி பெற்றனா்
அரசுப் பள்ளிகளில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் மாணவர்களின் திறனை கண்டறிவதற்கும், அவர்களை ஊக்கப்படுத்தும் வகையிலும், தமிழ்நாடு முதலமைச்சரின் திறனாய்வுத் தேர்வு ஆண்டு தோறும் நடைபெற்று வருகிறது. இந்தாண்டு அக்டோபர் மாதம் நடைபெற்ற திறனாய்வு தேர்வில் 1,27,673 மாணவ மாணவியர்கள் தேர்வு எழுதினர் .அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெறும் 500 மாணவர்கள், 500 மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு இளநிலை பட்டப்படிப்பு வரை மாதம் ரூ.1000 வீதம் ஒரு கல்வியாண்டில் 10 மாதங்களுக்கு உதவித்தொகையாக ரூ.10,000 வழங்கப்படும். லட்சக்கணக்கான மாணவர்கள் தேர்வு எழுதியதில் பேராவூரணி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் பேராவூரணி ரமா, செங்கமங்கலம் பிரியதர்ஷினி ஆகிய இருவரும் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவிகளை பள்ளி ஆசிரியர்கள், சமூக ஆர்வலர்கள் பாராட்டினர்.

Tags

Next Story