விமானத்தில் சென்ற அரசு பள்ளி மாணவர்கள்
தமிழக சட்ட சபையை பார்க்க விமானத்தில் சென்ற அரசு பள்ளி மாணவர்களை மதுரை மாநகராட்சி மேயர் வழி அனுப்பி வைத்தார்.
மதுரை to சென்னை தமிழக சட்டசபையைக் காண்பதற்காக விமானத்தில் பறக்கும் அரசு பள்ளி மாணவர்கள்- முதல் முறை விமானத்தில் செல்வதாக மாணவர்கள் நெகிழ்ச்சி.* வானில் சிறகடிப்போம் என்ற தலைப்பில் மதுரை ரோட்டரி கிளப் ஆப் மதுரை மிக்டவுன் சார்பாக மதுரை அரசு பள்ளி மற்றும் மதுரை மாநகராட்சி பள்ளியில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கக்கூடிய மாணவர்களில் சிறந்த மாணவர்களை தேர்வு செய்து மதுரையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் அழைத்துச் செல்லும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த வகையில் இன்று காலை ஏழு முப்பத்தைந்து மணிக்கு மதுரையிலிருந்து சென்னை செல்லும் விமானத்தில் செல்வதற்காக மாணவர்கள் விமான நிலையம் அழைத்துவரப்பட்டனர்.
விமான பயணம் மேற்கொள்ளும் மாணவர்களை மதுரை மேயர் இந்திராணி பொன் வசந்த், மாநகராட்சி ஆணையாளர் தினேஷ்குமார் ஆகியோர் ரோஜா பூ மற்றும் சாக்லேட வழங்கி மாணவர்களை வாழ்த்தி வழி அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து 10 மாணவ, மாணவிகள் மற்றும் ஒரு ஆசிரியர் என 11பேர் மதுரை விமான நிலையத்தில் இருந்து விமான மூலம் சென்னை புறப்பட்டு சென்றனர், மேலும் சென்னை செல்லும் மாணவர்கள் தமிழ்நாடு சட்டசபை நிகழ்வுகளை பார்த்துவிட்டு சுற்றுலா தலங்களையும் பார்த்துவிட்டு மீண்டும் பேருந்து மூலமாக மதுரை புறப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து மாணவர்கள் கூறுகையில் முதல்முறையாக விமானத்தில் செல்வது மகிழ்ச்சியாக இருப்பதாக நெகழ்ச்சியுடன் கூறினார்கள்.