அபாகஸ் தேர்வு எழுதிய அரசுப்பள்ளி மாணவர்கள் 

அபாகஸ் தேர்வு எழுதிய அரசுப்பள்ளி மாணவர்கள் 

அபாகஸ் தேர்வு

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் சர்வதேச அபாகஸ் போட்டிyil 53 மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வடகிழக்கு ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்காவில் இயங்கி வரும் குளோபல் அகாடமி ஆப் எக்ஸலன்ஸ் அமைப்பு, தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்துடன் இணைந்து, ஞாயிறன்று சர்வதேச அபாகஸ் போட்டியை நடத்தியது. இதில், இப்பள்ளியைச் சேர்ந்த 43 மாணவ, மாணவிகளும், மதுக்கூர் ஊராட்சி ஒன்றியம் புலவஞ்சி நடுநிலைப்பள்ளியைச் சார்ந்த 10 மாணவிகள் உட்பட, 53 மாணவ, மாணவிகள் அபாகஸ் தேர்வு எழுதினர்.

இப்போட்டியில், தேர்வாகும் மாணவர்களுக்கு கேடயம் மற்றும் சான்றிதழ்கள் ஏப்ரல் மாதம் வழங்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை GAE நிறுவனர் பிரஷிதா செய்திருந்தார். சர்வதேச அபாகஸ் போட்டிக்கான தேர்வினை, ஆடுதுறை மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் பால்ராஜ் துவக்கி வைத்தார். பள்ளி தலைமை ஆசிரியர் சித்ராதேவி வரவேற்றார்.

நிகழ்வில் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கௌதமன், பேரூராட்சி கவுன்சிலர் ஹபீபா ஃபாரூக், பள்ளி மேலாண்மை குழு தலைவி ஜெசிரா, ஆசிரியர் ஜோதி, மற்றும் வெங்கடேசன் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்விற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் உதவி ஆசிரியர் காஜாமுகைதீன், மற்றும் புலவஞ்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் முத்துவேல் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags

Next Story