காஞ்சியில் பணி முடிந்தும் திறக்கப்படாத அரசு பள்ளி மகளிர் கழிப்பறை

காஞ்சியில் பணி முடிந்தும் திறக்கப்படாத அரசு பள்ளி மகளிர் கழிப்பறை
திறக்கப்படாமல் உள்ள கழிவறை
காஞ்சியில் புதிதாக கட்டப்பட்ட கழிப்பறையை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, மாணவியர் கோரிக்கை வைத்துள்ளனர்

சின்ன காஞ்சிபுரம் பி.எம்.எஸ்., அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில், 1,500க்கும் மேற்பட்ட மாணவ- - மாணவியர் பயின்று வருகின்றனர். இப்பள்ளியில், கூடுதல் கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும் என, பள்ளி மேலாண்மை குழுவினர் கோரிக்கை விடுத்தனர்.

இதைத் தொடர்ந்து காஞ்சிபுரம் தி.மு.க எம்.எல்.ஏ., எழிலரசன், சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ஒதுக்கீடு செய்த 40 லட்சம் ரூபாய் செலவில், அதிநவீன கழிப்பறை கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை பள்ளி வளாகத்தில் கடந்த ஆண்டு மே 8ல் நடந்தது.

இதை தொடர்ந்து பழைய கழிப்பறை இடிக்கப்பட்டு, மாற்று ஏற்பாடாக பள்ளி வளாகத்தில் 'மொபைல் டாய்லெட்' வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிநவீன கழிப்பறை கட்டுமானப் பணி நிறைவடைந்து இரு மாதங்களுக்கு மேலாகியும் கழிப்பறை திறக்கப்பட்டு, மாணவியரின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் உள்ளது. தற்காலிகமாக அமைக்கப்பட்ட 'மொபைல் டாய்லெட்' மாணவியரின் எண்ணிக்கைகு ஏற்ப போதுமானதாக இல்லாததால், மாணவியர் இயற்கை உபாதை கழிக்க அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

எனவே, புதிதாக கட்டப்பட்ட கழிப்பறையை திறந்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story