திருச்செங்கோடு நகர திமுக செயல் வீரர்கள் கூட்டம்

திருச்செங்கோடு நகர திமுக செயற்குழு கூட்டம் நகர கழக அலுவலகத்தில் நடைபெற்றது.
திருச்செங்கோடு நகர திமுக செயற்குழு கூட்டம் நகர கழக அலுவலகத்தில் நகர அவைத் தலைவர் மாதேஸ்வரன் அவர்கள் தலைமையில் நகரக் கழகச் செயலாளர் கார்த்திகேயன் முன்னிலையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது... தலைமை கழக நிர்வாகிகள் மற்றும் நகர நிர்வாகிகளின் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. வருகின்ற மார்ச்-1 கழக தலைவர் தளபதியார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு நகர 33 வார்டு பகுதிகளிலும் கழகத்தின் இரு வண்ணக் கொடி ஏற்றியும், இனிப்புகள் வழங்கியும் விழாவை சிறப்பிக்குமாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பாக முகவர்களுக்கு வழங்கப்பட்ட OMR படிவங்களின் பணிகளை விரைவில் முடித்து நகர கழக அலுவலகத்தில் ஒப்படைக்கும் படி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Tags

Next Story