சேத்துப்பட்டு தாலுகாவில் ஆட்சியர் உத்தரவை பின்பற்றாமல் செயல்பட்ட அரசு பள்ளிகள்!

சேத்துப்பட்டு தாலுகாவில் ஆட்சியர் உத்தரவை பின்பற்றாமல் செயல்பட்ட அரசு பள்ளிகள்!

சேத்துப்பட்டு தாலுகாவில் ஆட்சியர் உத்தரவை பின்பற்றாமல் செயல்பட்ட அரசு பள்ளிகள்!

மழையில் மாணவர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்

தென்மேற்கு வங்கக்கடல்பகுதிகளில் நிலவிவந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்,தீவிர காற்றழுத்ததாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது.தீவிரகாற்றழுத்ததாழ்வு மண்டலம் மிக்ஜாம் புயலாக உருவாகியது.

இதைதொடர்ந்து திருவண்ணாமலை மாவட்டத் தில் கனமழை காரணமாக நேற்று செய்யார் வருவாய் கோட்டத்திற்குட்பட்ட (செய்யார், வந்தவாசி, வெம்பாக்கம், சேத்துப்பட்டு) தாலுகா பகுதிகளில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நேற்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டார். இந்த உத்தரவை தொடர்ந்து சேத்துப்பட்டு தாலுகாவில் உள்ள தனியார் பள்ளிகள் விடுமுறைவிட்ட நிலையில், தேவிகாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்டஅரசுபள்ளிகள் மாவட்ட ஆட்சியர் உத்தரவை கடைபிடிக்காமல், பள்ளி மாணவர்களின் நலனையும் கருத்தில் கொள்ளாமல் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்து கொண்டிருக்கும் இவ்வேளையில் மாணவர்களை தொலைபேசி வாயிலாக வர வைத்ததில் கொட்டும் மழையில் நனைந்து கொண்டே வந்த மாணவர்களுடன் பள்ளிகள் வழக்கம் போல் செயல்பட்டுக் கொண்டிருந்தது.

சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சிகளில் விடு முறை என அறிவிப்பு வந்த தால் அநேக மாணவர்கள் பள்ளிக்கு வரவில்லை. இருப்பினும் குறைந்த அளவு மாணவர்களை கொண்டு பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து பள்ளி வட்டார கல்வி அலுவலர் மற்றும் தலைமை ஆசிரியர்களிடம் கேட்டால் மாவட்ட ஆட்சியரின் உத்தரவு எங்களுக்கு இதுவரை வரவில்லை எனவும்.அதனால் பள்ளிகள் விடுமுறை இல்லாமல் தொடர்ந்து செயல்படுவதாக தெரிவிக்கின்றனர்.

திருவண்ணாமலை- மாவட்டத்தில் செய்யாறு வருவாய் கோட்டத்தில் நேற்று பள்ளிகள்மற்றும் கல்லூரி விடுமுறைவிட்டதில் பல்வேறு குழப்பங்கள் உள்ளதால் (சேத்துப்பட்டு தாலுகாவில், மேற்கு ஆரணி ஒன்றியம் இருப்பதால்) பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பள்ளி இருக்கா இல்லையா என தொலைக் காட்சியையை பார்த்துக் கொண்டு, பள்ளிக்கு வந்து பார்த்துக் கொண்டு கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர்.

Tags

Next Story