திருக்கோவிலூர் வீரட்டானேஸ்வரர் கோவிலில் அரசு செயலர் ஆய்வு
அரசு செயலருக்கு வரவேற்பு
திருக்கோவிலுார், கீழையூர், வீரட்டானேஸ்வரர் கோவில் திருப்பணி இந்து சமய அறநிலைத்துறையால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் முருகர் கோவில் திருப்பணி முடிந்து சமீபத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. பள்ளிக் கல்வித்துறை செயலாளர் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை கூடுதல் சிறப்பு அலுவலராக இருக்கும் குமரகுருபரன் நேற்று வீரட்டானேஸ்வரர் கோவில் திருப்பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். பின்னர் சுவாமி தரிசனம் செய்தார். முருகர் கோவிலில் குடும்பத்துடன் சிறப்பு வழிபாடு நடத்தினார். இந்து சமய அறநிலையத்துறை சார்பில் செயலாளருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
Next Story