குற்றசம்பவங்களை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் -ஏ.சி.சண்முகம்
ஏ.சி .சண்முகம் செய்தியாளர் சந்திப்பு
வேலூரில் புதிய நீதி கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா மறைவிற்கு இரங்கலை தெரிவித்தார். சங்கரய்யா எளிமையானவர் அனைத்து கட்சியினரிடம் அன்பாக பழகக்கூடியவர் என்று கூறினார். தமிழகத்தில் மத்திய அரசு திட்டங்கள் மாநில அரசு மூலம் செயல்படுத்தப்பட்டு வருவதால், வருவாய்த் துறையில் உள்ள அலுவலர்கள் அந்த திட்டங்கள் மாநில அரசு திட்டங்கள் என்று கருதி செயல்படுத்துகிறார்கள். இது வருந்தத்தக்க செயல்.இந்த நிலை மாற வேண்டும் என்று கூறினார். நாடாளுமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அதிக அளவில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக நரேந்திர மோடி மீண்டும் பிரதமராக வருவார். தமிழகத்தில் கொலை,கொள்ளை குற்ற சம்பவங்கள் அதிகமாகி கொண்டுவருகிறது இதனை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். பருவமழையின் காரணமாக டெல்டா மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தஞ்சை, நாகப்பட்டினம், திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வேளாண் நிலங்கள் தண்ணீரில் மூழ்கி பாதிப்படைந்துள்ளது. தமிழக அரசு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிதி உதவி செய்ய வேண்டும் அல்லது விவசாயிகளுக்கு காப்பீட்டு திட்டத்தில் அவர்களுக்கு நிதி ஒதுக்க வேண்டும் . தமிழகத்தில் தற்போது பாஜக அதிக அளவில் வளர்ச்சி அடைந்து வருகிறது. வளர்ச்சி அடைந்து வருவதால் தான் பாஜகவின் ஊர்வலங்கள், பேரணிகள் மற்றும் போராட்டங்களுக்கு தமிழக அரசு தடை விதிக்கிறது.என ஏ சி சண்முகம் கூறினார்.
Tags
Next Story