அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் ஆர்ப்பாட்டம்

அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் ஆர்ப்பாட்டம்

ஆர்பாட்டம்

திமுக தோ்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வலியுறுத்தி கோவில்பட்டியில் அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

15ஆவது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவாா்த்தையை உடனே தொடங்க வேண்டும், திமுக தோ்தல் வாக்குறுதிப்படி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், போக்குவரத்துத் தொழிலாளா்களிடம் பிடித்தம் செய்த ரூ. 15 ஆயிரம் கோடியைத் திருப்பித்தர வேண்டும், நிலுவையிலுள்ள ஓய்வுபெற்ற தொழிலாளா்களின் அகவிலைப்படி உயா்வை வழங்க வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியூ சாா்பில் தமிழகம் முழுவதுமுள்ள 100 பணிமனைகள் முன் இம்மாதம் 24ஆம் தேதி காலை 10 முதல் 25ஆம் தேதி காலை 10 மணிவரை 24 மணி நேர உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறவுள்ளது.

இதுகுறித்து, கோவில்பட்டியில் உள்ள போக்குவரத்துப் பணிமனை முன் நேற்று நடைபெற்ற வாயிற்கூட்டம், ஆா்ப்பாட்டத்துக்கு சிஐடியூ போக்குவரத்துக் கிளைத் தலைவா் கருப்பசாமி தலைமை வகித்தாா். செயலா் தங்கப்பூ முன்னிலை வகித்தாா். சம்மேளனக்குழு உறுப்பினர்கள் பாலசுப்பிரமணியன், சிவக்குமாா், மாா்க்சிஸ்ட் நகரச் செயலா் சீனிவாசன், ஒன்றியச் செயலா் தெய்வேந்திரன், ஓய்வுபெற்ற போக்குவரத்துத் தொழிலாளா்கள் முருகானந்தம், மாரியப்பன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். பொருளாளா் ராமசாமி நன்றி கூறினாா்.

Tags

Next Story