அரசு போக்குவரத்து ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

அரசு போக்குவரத்து ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
அரசு போக்குவரத்து ஊழியர்களின் பல்வேறு சங்கங்களை சேர்ந்த பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
அரசு போக்குவரத்து ஊழியர்களின் பல்வேறு சங்கங்களை சேர்ந்த பணியாளர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில ஈடுபட்டனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வு பெற்றோர் நல சங்கங்கள் கூட்டமைப்பு சார்பில் அனைத்து போக்குவரத்து பணி மணிகள் முன்பு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது வருகிறது.

அதன் ஒரு பகுதியாக தர்மபுரி மாவட்டத்தில் அரூர் தர்மபுரி பொம்மிடி பென்னாகரம் உள்ளிட்ட பகுதிகளில், கழகங்களின் வரவுக்கும் செலவுக்கான வித்தியாச தொகைகள், ஓய்வூதியர்களுக்கு ஒப்பந்தப் பலன், அகவிலைப்படி உயர்வு, 01.04.2003க்கு பின் பணியில் சேர்ந்தவர்களுக்கு பழைய ஓய்வூதியம், வாரிசுகளுக்கு வேலை, காலிப்பணியிடங்கள் இடங்களை நிரப்பிடு 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே துவக்கிடு வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்திகவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் போக்குவரத்து பணிமனை முன்பு நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முன் வராவிட்டால் வருகின்ற டிசம்பர் 19ஆம் தேதி வேலை நிறுத்த அறிவிப்பு செய்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழக அரசுக்கு எதிராக ஊழியர்கள் முழக்கமிட்டனர்

Tags

Next Story