அரசின் இடைக்கால பட்ஜெட்: வர்த்தக தொழில் சங்கம் வரவேற்பு!

அரசின் இடைக்கால பட்ஜெட்: வர்த்தக தொழில் சங்கம் வரவேற்பு!

மத்திய அரசின் 2024-2025 ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டுக்கு தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் 2024-2025 ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டுக்கு தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது.

மக்களவையில் 2024-2025 ஆம் நிதியாண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். இந்நிலையில் இந்த பட்ஜெட்டுக்கு தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கம் வரவேற்பு தெரிவித்து வெளியிட்ட அறிக்கையில், "ஐடி துறை இளைஞர்களை தொழிற் முனைவோர்களாக மாற்ற ரூ.1 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. படித்த இளைஞர்களுக்கு 22.5 லட்சம் கோடியில் தொழில் தொடங்க கடனுதவி வழங்குவது வரவேற்கத்தக்கது. நாடு முழுவதும் விமான நிலையங்களின் எண்ணிக்கை 149 ஆக உயர்த்தப்படும். விமான நிலையங்களின் எண்ணிக்கை இரட்டிப்பாக்கப்படும்.

புதிய சாலை ரயில் திட்டங்களுக்கான 3 முக்கிய வழித்தடங்கள் அமைக்கப்படுவதால் ஏற்றுமதி இறக்குமதி தொழில்களுக்கு மிகவும் ஏதுவாக அமைவது வரவேற்கத்தக்கது. சிறு நகரங்களில் விமான சேவையை தொடங்க 1000 விமானங்களை கொள்முதல் செய்யும் திட்டம் வரவேற்கத்தக்தாகும். சூரிய ஒளி மின்சாரம் மூலம் ஒரு கோடி பேருக்கு 300 யூனிட் மின்சாரம் வழங்க இலக்கு நிர்ணயித்திருப்பது வரவேற்கத்தக்கது. மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் ரூ.1.3 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்திருப்பது வரவேற்கத்தக்கது. விவசாயிகளுக்கு நானோ யூரியா அதிக அளவில் விநியோகிக்கப்படுவது வரவேற்கத்தக்கது.

கடந்த 10 ஆண்டுகளில் கடல் உணவு ஏற்றுமதி 2 மடங்கு அதிகரித்துள்ளது வரவேற்கத்தக்கது. மீன்வளத்துறையில் 3 கோடி பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க இலக்கு நிர்ணயித்திருப்பது வரவேற்கத்தக்கது. முத்ரா யோஜனா திட்டத்தின் மூலம் 30 கோடி பெண்களுக்கு கடன் உதவி திட்டம் அளிக்கப்படுவது வரவேற்கத்தக்கது. 5 கடல்சார் தொழிற் பூங்காக்கள் உருவாக்கப்படுவது வரவேற்கத்தக்கது. உதான் திட்டத்தின் கீழ் சிறு நகரங்களில் விமான நிலையங்கள் நிறுவப்படுவது வரவேற்கத்தக்கது. 40000 ரயில் பெட்டிகள் வந்தே பாரத் ரயில் பெட்டிகளாக மாற்றப்படுவது வரவேற்கத்தக்கது. லட்சத்தீவில் சுற்றுலா மேம்பாட்டுக்கு முன்னுரிமை வழங்கப்படுவது வரவேற்கத்தக்கது. மொத்தத்தில் மத்திய அரசின் இந்த இடைக்கால பட்ஜெட் (2024 - 2025) வரவேற்கத்தக்கதாக அமைந்துள்ளது" என்று தூத்துக்குடி அகில இந்திய வர்த்தக தொழில் சங்கத் தலைவர் தமிழரசு தெரிவித்தார்.

Tags

Next Story