அரசின் மீட்புப் பணிகள் பாராட்டுக்குரியது -கே.எஸ். அழகிரி

அரசின் மீட்புப் பணிகள் பாராட்டுக்குரியது -கே.எஸ். அழகிரி

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் அரசின் மீட்புப் பணிகள் பாராட்டுக்குரியது என காங் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார். 

சென்னையில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களில் அரசின் மீட்புப் பணிகள் பாராட்டுக்குரியது என காங் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார்.

தர்மபுரியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய காங்கிரஸ் கட்சியி்ன் தமிழ்நாடு மாநிலத்தலைவர் கே.எஸ். அழகிரி, சென்னை பெரு மழை பாதிப்பு குறித்து பேசும்போது, எந்த நிர்வாகத்தாலும் அவ்வளவு பெரிய தண்ணீரை வடித்திருக்க முடியாது, ஏறத்தாழ மேக வெடிப்பு போல மழை பொழிந்திருக்கிறது. ஆனாலும் அரசாங்கம் மீட்பு மற்றும் நிவாரண பணிகளை நன்றாக செய்துள்ளது, அரசாங்கத்தை இந்த நேரத்தில் விமர்சிக்க வேண்டிய அவசியமில்லை, தங்களால் இயன்ற பணிகளை செய்திருக்கிறது, தமிழக அரசை விமர்சிப்பவர்கள் அரசியல் காரணங்களுக்காக விமர்சிப்பவர்களாக தான் இருப்பார்கள், ஒரு இயற்கை பேரிடரை, எந்த ஒரு நிர்வாகமும் உடனடியாக சரி செய்து விடமுடியாது, இது மனித குற்றமல்ல" . இது இயற்கையே செய்த ஒரு பெரிய செயல், எவ்வளவு விரைவாக மழை நீரை வெளியேற்ற முடியுமோ அவ்வளவு விரைவாக மழை நீரை வெளியேற்றியிருக்கிறார்கள்.

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக 6 ஆயிரம் ரூபாய் நிதியுதவி வழங்கியிருப்பது பாராட்டப்பட வேண்டியது. மனிதாபிமான நோக்கத்துடன் தமிழக முதலமைச்சர் செய்திருக்கிறார், இதை தமிழக காங்கிரஸ் பாராட்டுகிறது, வரேவற்கிறது. என்றார். மோடி அரசாங்கம் அரசமைப்பு சட்டத்திற்கு எதிராக செயல்படுகிறது, என்று காங்கிரஸ் உட்பட எதிர்க்கட்சிகளும் கூறுகிறது, உச்ச நீதிமன்றமும் தெளிவு படுத்துகிறது, காஷ்மீர் விவகாரத்தில் 370 அரசியல் சட்ட திருத்த நீக்கம் பற்றியும், அந்த மாநிலத்தை மூன்றாக பிரித்தது தொடர்பாக உச்ச நீதிமன்றமும் கண்டனத்தை தெரிவித்திருக்கிறது, இதற்கு மோடி ராஜினாமா செய்ய வேண்டிய செயல் ஆனால் அவர் அதை செய்ய மாட்டார், இது குறித்து பாஜக வாய் திறக்கவில்லை காரணம். அவர்கள் சர்வாதிகாரிகள் என குற்றம் சாட்டிய கே எஸ் அழகிரி, அதானி பற்றியும், அதானி கம்பெனிகளை பற்றியும் கேள்வி கேட்டதற்கு மம்தா பானர்ஜியின் எம்பி ஒருவர் நாடாளுமன்றத்தில் நீக்கப்பட்டிருப்பதாகவும், மோடியை பற்றி பேசினால் கூட அனுமதிக்கிறார்கள், ஆனால் அதானியை பற்றி பேசிவிடக்கூடாது, இது கொடுமையிலும் கொடுமை.

இது கண்டிக்க தக்கது. தொடர்ந்து பேசிய அவர் சமீபத்தில் நடந்த தேர்தலில் காங்கரசுக்கு பி்ன்னடைவு ஏற்பட்டிரூப்பதாகவும், அதை பின்னடைவாக கருதவில்லை காரணம் பா ஜ க வை விட காங்கரஸ் வாங்கிய வாக்குகள் அதிகம் வாங்கியிருப்பதாக தெரிவித்தார். கடந்த தேர்தல்களில் பாஜக வை விட அதிக வாக்குகள் பெற்று நாடாளுமன்றத்தை கைப்பற்றியதாக, தெரிவித்தார். இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிராக பாஜக தொடர்ந்து செயல்படுகிறது, உச்ச நீதிமன்றமும் சொல்லி இருக்கிறது, காஷ்மீர் விவகாரத்தில் நேரு குறித்து அமித்ஷா நாடாளுமன்றத்தில் பேசியிருப்பதே தவறு என்றார். நேருவை பற்றி வரலாற்று உண்மைகளை பற்றி தெரியாமல் பேசுகிறார்,அமித்ஷா. ஜாதி வாரி கணக்கெடுப்பு என்பது மத்திய அரசு எடு்க்க வேண்டும், அப்பொழுது தான் சட்டமாக்க முடியும், மாநில அரசு எடுத்தால் செய்தியாக தான் இருக்குமே தவிர எந்த பலனும் தராது, என்றார் பேட்டி.. கே. எஸ். அழகிரி, தலைவர் தமிழ்நாடு காங்கிரஸ்

Tags

Next Story