சென்னை கிளம்பினார் ஆளுநர்

சென்னை கிளம்பினார் ஆளுநர்

ஆளுநர்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி 5 நாள் பயணத்தை முடித்து சாலை மார்க்கமாக சென்னை சென்றார்.

உயர்கல்வியில் மாற்றம், மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை வலியுறுத்தி கடந்த மூன்று ஆண்டுகளாக நீலகிரி மாவட்டம் ஊட்டி ராஜ்பவன் மாளிகையில், ஆளுநர் தலைமையில் துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற்றது.

இந்நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற துணைவேந்தர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கடந்த 25-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி ஊட்டி ராஜ்பவன் மாளிகை வந்தார். 26 -ம் தேதி ராஜ்பவன் மாளிகையில் ஓய்வு எடுத்தார். இதையடுத்து 27 மற்றும் 28-ம் தேதிகளில் நடைபெற்ற துணைவேந்தர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார்.

மாநாட்டில், ஆளுநராக நான் பொறுப்பேற்றபோது பல்கலைக்கழகங்கள் இணைப்பு இல்லாமல் இருந்தது, தமிழக மாணவர்களிடம் உயர்கல்வி, வேலை வாய்ப்பு குறித்து போதிய விழிப்புணர்வு இல்லை. தமிழக பல்கலைக்கழக பாடத்திட்டங்களில் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு சிலர் குறித்து மட்டுமே இடம் பெற்றுள்ளது.

திராவிட இயக்க வரலாறுதான் அதிக அளவில் உள்ளது என்று பேசினார். இந்த பேச்சு தமிழக அரசியல் களத்தில் மீண்டும் பேசு பொருளாக மாறி உள்ளது. இந்நிலையில் நேற்று கோத்தகிரி மற்றும் கோடநாடு காட்சி முணை உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசிக்கவுள்ளதாக பயணத்திட்டத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் இந்த பயணத்தை ரத்து செய்து ராஜ்பவன் மாளிகையில் ஆளுநர் ஒய்வெடுத்தார். இந்நிலையில் இன்று காலை 11:15 மணி அளவில் ஊட்டி ராஜ்பவனிலிருந்து சாலை மார்க்கமாக கோவை சென்று அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கின்றார்.

Tags

Next Story