நாசரேத் கராத்தே மாஸ்டருக்கு விருது வழங்கிய ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன்
விருது வழங்கிய ஆளுநர்
நாசரேத் ஆலன் திலக் கராத்தே பள்ளி மாஸ்டர் கராத்தே டென்னிசனுக்கு சிறந்த கராத்தே மாஸ்டருக்கான விருதினை தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் வழங்கினார்.
நாசரேத் ஆலன் திலக் கராத்தே பள்ளி மாஸ்டர் கராத்தே டென்னிசனுக்கு சிறந்த கராத்தே மாஸ்டர் விருது 2023 க்கான உலக கராத்தே மாஸ்டர் அசோசியேசன் சார்பாக சென்னை எக்மோர் தனியார் நட்சத்திர ஹோட்டலில் வைத்து வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன் கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார்.
Next Story