ஆளுநர் தான் மட்டுமே பேச வேண்டும் என நினைக்கிறார்: அமைச்சர் பொன்முடி
அமைச்சர் பொன்முடி
விழுப்புரத்தில் திமுக கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை சார்பில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கலைஞரின் திரைப்பட வசனங்கள் கவிதைகள் கதைகள் கதைகள் ஒப்புவித்தல் போட்டி விழுப்புரம் கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவ மாணவிகள் கலந்து கொண்டு தங்கள் பேச்சாற்றலை வெளிப்படுத்தினர.
இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார் தொடர்ந்து மாணவர்களிடம் நீட் எதிர்ப்பு காண கையெழுத்து பெறப்பட்டது தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் பொன்முடி: தமிழகத்தில் பாரதிய ஜனதா ஆட்சிக்கு வந்தார் பெரியார் சிலை அகற்றப்படும் என அண்ணாமலை கூறியது தொடர்பான கேள்விக்கு, இந்த கேள்விக்கு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபுவும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி தெளிவாக பதில் அளித்துள்ளனர்.
இன்றைக்கு அண்ணாமலை ஐபிஎஸ் ஆக இருப்பதற்கு காரணமே பெரியார் தான். தமிழகத்தில் இன்று எல்லா சமூகத்தினரும் படிக்கிறார்கள். ஆணும், பெண்ணும் என்ற சமம் என்ற உணர்வோடு வளர்ந்து இருக்கிறார்கள் என்றால் அது பெரியார் போட்ட விதைதான். அரசியலுக்கு அப்பாற்பட்டு உண்மையில் சமூகத்தின் மீது பற்றுள்ள அனைவரும் பெரியாரை ஏற்றுக் கொண்டுள்ளனர். மேலும் வட இந்தியாவிலும் பெரியாரை ஏற்றுக் கொண்டுள்ளனர்.
பெரியார் சிலை குறித்து பேசுவதற்கு அண்ணாமலைக்கு எந்த தகுதியும் இல்லை. அண்ணாமலை கருத்து ஏற்க வேண்டிய அவசியம் இல்லை பெரியாரை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். தொலைக்காட்சி விளம்பரத்திற்காக அண்ணாமலை இதை பேசி வருகிறார்.. பெரியார் அண்ணா கலைஞர் தமிழ்நாட்டின் மக்களுக்காக எந்த அளவுக்கு பாடுபட்டார்கள் என்பது அவருக்கே தெரியும் அவர்களின் சிலை வைப்பதின் நோக்கம் அடித்தட்டு மக்களுக்கும் அவர்களின் கொள்கை சென்று சேர வேண்டும் என்பதுதான் அண்ணாமலை அண்ணாமலை அவரை திருத்திக் கொள்ள வேண்டும்.
ஆளுநர் தான் மட்டுமே பேச வேண்டும் என நினைக்கிறார். தன்னை மட்டும் முன்னிலைப்படுத்திக் கொள்கிறார். ஆளுநர் மற்றவர்கள் பேசுவதற்கும் அனுமதிக்க வேண்டும். ஆளுநர் இதற்கு பிறகாவது ஒவ்வொரு பட்டமளிப்பு விழாவிலும் சிறப்பு விருந்தினர்களையும் அழைக்க வேண்டும், துறை செயலாளர்களை அழைக்க வேண்டும். பேச அனுமதிக்கவில்லை என்றாலும் குறைந்தபட்சம் பத்திரிக்கையில் பெயர் போட்டு அழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.