குமுளி மலைச்சாலையில் பிரேக் பிடிக்காமல் அரசு பஸ் விபத்து

குமுளி மலைச்சாலையில் பிரேக் பிடிக்காமல் அரசு பஸ் விபத்து

விபத்துக்குள்ளான பேருந்து

குமுளி மலைச்சாலையில் பிரேக் பிடிக்காமல் தடுப்புச்சுவரில் மோதி அரசு பஸ் விபத்துக்குள்ளானது.

திண்டுக்கல் அரசு போக்குவரத்து கழக பணிமனையை சேர்ந்த அரசு பஸ் ஒன்று குமுளியில் இருந்து திண்டுக்கல் புறப்பட்டு சென்றது. பஸ்சில் திண்டுக்கல் பகுதியைச் சேர்ந்த சென்ராயன் டிரைவராகவும், கிருஷ்ணமூர்த்தி கண்டக்டராகவும் பணியில் இருந்தனர்.

குமுளி மலைப்பாதையில் மூன்றாவது பாலம் கீழ்பகுதியில் உள்ள 'எஸ்' வளைவு பகுதி இறக்கத்தில் பஸ் வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக பஸ்சில் பிரேக் பிடிக்கவில்லை.

இதையடுத்து டிரைவர் சாமர்த்தியமாக வலது பக்கமாக பஸ்சை திருப்பி மலைச்சாலையின் வலது ஓரத்தில் இருந்த தடுப்புச் சுவர் மீது மோதி பஸ்சை நிறுத்தினார்.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு குமுளி பணிமனை மேலாளர் ரமேஷ் மற்றும் லோயர்கேம்ப் போலீசார் வந்து பார்வையிட்டு, குமுளியில் இருந்து வந்த வேறொரு அரசு பஸ்சில் பயணிகளை அனுப்பி வைத்தனர்.

Tags

Next Story