விருதுநகர் அருகே பைக் மீது அரசு பேருந்து மோதல்: ஒருவர் பலி

விருதுநகர் அருகே பைக் மீது அரசு பேருந்து மோதல்: ஒருவர் பலி
X
காவல் நிலையம் 
விருதுநகர் புல்லலக்கோட்டை விலக்கில் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் பலி ஒருவர் காயம் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விருதுநகர் புல்லலக்கோட்டை விலக்கில் இருசக்கர வாகனம் மீது அரசு பேருந்து மோதிய விபத்தில் ஒருவர் பலி ஒருவர் காயம் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் விருதுநகர் பெரிய பேராளி பகுதியைச் சார்ந்தவர் முத்து வயது 37.

இவர் அதே உரை சார்ந்த அர்ஜுனன் என்பவருடன் விருதுநகர் அருகே உள்ள சிவஞானபுரத்தில் உள்ள முனியாண்டி கோவிலில் விசேஷத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது.

விசேஷம் முடிந்து இருசக்கர வாகனத்தில் முத்து ஒட்டி வந்ததாகவும் பின்னால் அர்ஜுனன் அமர்ந்திருந்ததாகவும் கூறப்படுகிறது. அவர்கள் வந்த இருசக்கர வாகனம் புல்லலக்கோட்டை விலக்கில் சாலையை கடக்க முயற்சித்த பொழுது மதுரை சேர்ந்த ஷாம் சுதன் என்பவர் இயக்கி வந்த அரசு பேருந்து அதிவேகமாகவும் அஜாக்கிரதையாக ஒட்டி வரப்பட்டு முத்து ஓட்டி வந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது.

இதில் முத்துவிற்கு காயம் ஏற்பட்டதாகவும் பின்னால் அமர்ந்து இருந்த அர்ஜுனன் கீழே விழுந்து பலத்த காயமடைந்ததாகவும் காயம் அடைந்த இருவரையும் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றதாகவும் அங்கு பணியில் இருந்த மருத்துவர்கள் அர்ஜுனனை பரிசோதனை செய்துவிட்டு அர்ஜுனன் ஏற்கனவே இறந்து விட்டதை உறுதிப்படுத்தி உள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த முத்து அளித்த புகாரின் அடிப்படையில் மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story