பணிச்சுமை காரணமாக அரசு பேருந்து ஓட்டுனர் தற்கொலை முயற்சி - மருத்துவமனையில் அனுமதி

பணிச்சுமை காரணமாக அரசு பேருந்து ஓட்டுனர் தற்கொலை முயற்சி - மருத்துவமனையில் அனுமதி

பணிச்சுமை காரணமாக அரசு பேருந்து ஓட்டுனர் தற்கொலை முயற்சி 

18 மணி நேரம் வேலை பார்ப்பதாக புகார்
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையை சேர்ந்தவர் மணிமுத்து. இவர் தேவகோட்டை அரசு போக்குவரத்து பணிமனையில் 2015 ஆம் ஆண்டு முதல் ஓட்டுனராக பணிபுரிந்து வருகிறார். இவர் கடந்த 5 ஆண்டுகளாக தேவகோட்டையிலிருந்து பழனி செல்லும் பேருந்தில் பணிபுரிந்து வருகிறார். அப்பேருந்தில் அதிகாலை 4.40 மணிக்கு செல்லும் அவர், இரவு 11 மணிக்கு பணி முடித்து வீடு திரும்புகிறார். தொடர்ந்து 18 மணி நேரம் வேலை செய்வதால் உடல்நிலை பாதிக்கப்படுவதாக கூறி வேறு வழித்தடத்தில் பணி வழங்குமாறு அதிகாரிகளிடம் கேட்டு வந்தார். ஆனால் அவரது கோரிக்கையை அதிகாரிகள் ஏற்கவில்லை. இந்நிலையில் மணிமுத்துவுக்கு ஆதரவாக சக தொழிலாளர்கள் தேவகோட்டை பணிமனையில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது திடீரென மணிமுத்து பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். சிறிதளவு குடித்த நிலையில் அங்கிருந்தோர் மருந்தை தட்டிவிட்டு அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

Tags

Next Story