விபத்து இழப்பீடு வழங்காததால் காங்கயத்தில் 2 அரசு பேருந்துகள் ஜப்தி

விபத்து இழப்பீடு வழங்காததால் காங்கயத்தில் 2 அரசு பேருந்துகள் ஜப்தி

அரசு பேருந்து ஜப்தி

காங்கயத்தில் விபத்து இழப்பீடு வழங்காததால் சார்பு நீதிமன்ற உத்தரவின் பேரில் கோவை கோட்டத்திற்கு உட்பட்ட 2 அரசு பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டது.

2019 ஆம் ஆண்டு காங்கயத்தில் ஏற்பட்ட 2 வெவ்வேறு அரசு பேருந்துகள் சாலை விபத்தில் உயிரிழந்தவரின் குடும்பத்தார்கள் தொடரப்பட்ட வழக்கில் காங்கயம் சார்பு நீதிமன்றத்தில் இறந்தவரின் குடும்பத்திற்கு அரசு போக்குவரத்து கழகத்தில் இருந்து ரூ. 12 லட்சம் தொகையை இழப்பீடாக வழங்க கோரி தீர்ப்பு வழங்கப்பட்டது.

இதை அடுத்து அரசு போக்குவரத்துக் கழகத்திலிருந்து விபத்துக்கான இழப்பீடுகள் தற்போது வரை வழங்கப்படாமல் இருந்து வந்தது. எனவே இதனால் காங்கயம் சார்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவின் அடிப்படையில் விபத்து இழப்பீடுகள் வழங்கப்படாததை அடுத்து நேற்று காங்கயம் பேருந்து நிலையத்தில் கோவை செல்லும் 2 அரசு பேருந்துகள் ஜப்தி செய்யப்பட்டது. இதனை அடுத்து பேருந்தில் இருந்த அனைத்து பயணிகளும் இறக்கி வேறு பேருந்துகளில் பத்திரமாக ஏற்றிவிடப்பட்டது. மேலும் வழக்கறிஞர் நந்தினி தலைமையிலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தலைமையிலும் அரசு பேருந்து நேற்று காலை ஜப்தி செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Tags

Next Story