மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து

மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து

கவிழ்ந்த பேருந்து

மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளனது.

சென்னையில் இருந்து தமிழக அரசு பேருந்து 40-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு கிழக்கு கடற்கரை சாலை மார்க்கமாக புதுவைக்கு வந்து கொண்டிருந்தது. இந்தப் பேருந்தை அருணாச்சலம் வயது (45)ஓட்டி வந்தார்.

இந்தப் பேருந்து மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலை உள்ள ஒரு தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி அருகில் வந்த போது பேருந்தின் முன்னால் மரக்காணம் பகுதியை சேர்ந்த சிவச்சந்திரன் வயது 25 என்பவர் மோட்டார் பைக்கில் சென்றுள்ளார். அப்போது மோட்டார் பைக்கில் சென்ற நபர் திடீரென வலது புறமாக திரும்பி உள்ளார். இவர் மீது பேருந்து மோதாமல் இருக்க பேருந்தின் ஓட்டுனர் திடீரென பிரேக் அடித்து வலது புறமாகவே திருப்பி உள்ளார்.

இதன் காரணமாக ஓட்டுனரின் கட்டுப்பாட்டை மீறிய பேருந்து சாலை ஓரம் கவிழ்ந்து விட்டது. இந்த விபத்தை சற்று எதிர் பாராத பேருந்தில் வந்த பயணிகள் கூக்குரலிட்டு அலறி துடித்துள்ளனர் இதனைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் மரக்காணம் காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு துறை அலுவலர்களுக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்த மரக்காணம் போலீசார் தீயணைப்பு நிலைய வீரர்கள் உடனடியாக சம்பவத்திற்கு சென்று விபத்துக்குள்ளான பேருதிலிருந்தவர்களை பத்திரமாக மீட்டு வெளியில் கொண்டு வந்தனர். இதில் மோட்டார் பைக்கில் வந்த மரக்காணத்தை சேர்ந்த சிவச்சந்திரன் மற்றும் பேருந்தில் வந்த புதுச்சேரியே சேர்ந்த பிரியங்கா 30, கடலூரை சேர்ந்த லட்சுமி 35, புதுச்சேரி சேர்ந்த இனியா 25 , கடலூரை சேர்ந்த பாலாஜி 60, கடலூரை சேர்ந்த தேவகி 55 உள்பட 20 பேர் படுகாயம் அடைந்தனர் மற்ற பயணிகள் சிறிய காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பினர்.

படுகாயம் அடைந்த நபர்களை மீட்டு ஆம்புலன்ஸ் வாகன மூலம் மரக்காணத்தில் உள்ள அரசு பொது மருத்துவமனைக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்க அழைத்து சென்றனர். இச்சம்பவம் குறித்து மரக்காணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story