சேர்வைகாரன்மடம் பகுதியை அரசு பஸ்கள் புறக்கணிப்பு: மக்கள் அவதி

சேர்வைகாரன்மடம் பகுதியை அரசு பஸ்கள் புறக்கணிப்பு: மக்கள் அவதி

அரசு பேருந்து

சேர்வைகாரன்மடம் பகுதிக்கு அரசு பேருந்துகளை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊராட்சி உபதலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா கோரிக்கை விடுத்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி அரசு பணிமணையிலிருந்து சேர்வைகாரன்மடம் ஊராட்சி வழியாக 52A (2S) 147Aமற்றும் 52F ஆகிய பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. மேற்கண்ட பேருந்துகளுக்கு மாற்றாக அரசு மூலம் 3 புதிய பேருந்துகள் வழங்கப்பட்டு உள்ளது. மேலும் இத்தடத்தில் 52B ,147 மற்றும் 104 போன்ற பேருந்துகள் திடீரென நிறுத்தப்பட்டும்,

நினைத்த நேரத்திற்கு இயக்கப்பட்டு வருகின்றது. இதனால் இப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். தூத்துக்குடி மற்றும் திருவைகுண்டம் பணிமனை மேனேஜர்களிடம் பலமுறை கூறியும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே 52A மற்றும் 52F உள்பட நிர்ணயிக்கபட்ட வழித்தடத்தில் அனைத்து பேருந்துகள் அனைத்தையும் இயக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஊராட்சி உபதலைவர் ஏஞ்சலின் ஜெனிட்டா மற்றும் வார்டு உறுப்பினர்க‌ள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Tags

Next Story