விளையாட்டு மைதானமற்ற அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி - மாணவிகள் தவிப்பு

விளையாட்டு மைதானமற்ற அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி - மாணவிகள் தவிப்பு

விளையாட்டு பயிற்சி 

சிவகங்கை - மேலூர் சாலையில் உள்ளது சிவகங்கை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி. இந்த பள்ளி ஆனது 1939 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு 1959 ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாகவும், 1979ஆம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கு சிவகங்கை நகர், காஞ்சிரங்கால் பெருமாள்பட்டி, இலந்தங்குடிபட்டி சோழபுரம்,ஒக்கூர்,மதகுபட்டி இடையமேலூர், தமராக்கி, கண்டனி, கூத்தாண்டன், சுந்தரநடப்பு உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 700க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்த பள்ளி நகரின் முக்கிய இடத்தில் அமைந்துள்ளதால் விளையாட்டு மைதானத்திற்கு இடம் இல்லை. தற்போது இந்த பள்ளி வளாகத்தில் இருந்த ஆய்வக கட்டிடம் இடிக்கப்பட்டதால் அந்த சிறிய அளவிலான இடத்தில் மாணவிகள் விளையாட்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் விளையாட்டு பிரிவுக்கு மாணவிகள் சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு சென்று வரும் சூழ்நிலை உள்ளது.

தற்போது பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற நீச்சல், ஜிம்னாஸ்டிக், டேக்வோன்டோ, நீச்சல், டென்னிஸ், சிலம்பம், ஸ்குவாஷ், உள்ளிட்ட பல்வேறு போட்டியளில் வெற்றி பெற்று இதே பள்ளியிருந்து 23 மாணவிகள் மாநில போட்டிக்கு தேர்வாகியுள்ளனர். மேலும் சென்ற வருடம் பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட மாநில அளவிலான சிலம்பம் போட்டியில் முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்தை வென்றனர்‌. பல்வேறு போட்டியில் மாநில அளவிலும் தேசிய, அளவிலான விளையாட்டு போட்டியிலும் வெற்றி பெற்று சாதனை புரிந்து வரும் இந்த மாணவிகளுக்கு பள்ளி வளாகத்தின் அருகிலே உள்ள அரசு மற்றும் தனியார் இடங்களில் விளையாட்டு மைதானம் ஏற்படுத்தி தர வேண்டும் என பெற்றோர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story