கீழ்பெண்ணாத்தூர் அருகே உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு அரசு மரியாதை
மரியாதை செய்த மாவட்ட ஆட்சியர்
கீழ்பெண்ணாத்தூர் அருகே உடல் உறுப்பு தானம் செய்த உடலுக்கு மாவட்ட ஆட்சியர் மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூர் அடுத்த துரிஞ்சாபுரம் ஊராட்சி ஒன்றியம் மாதுலம்பாடி கணேசபுரத்தை சேர்ந்த திரு. நாராயணன் என்பவர் மகன் ஹரிஹரன் என்பவர் கடந்த 31.03.2024 அன்று விபத்துக்குள்ளாகி மரணமடைந்தார். அதனைத் தொடர்ந்து அவரது குடும்பத்தார் உடல் உறுப்பு தானம் செய்ய சம்மதித்து அன்னாரது உடல் உறுப்பு தானமாக வழங்கப்பட்டது.
உடல் உறுப்பு தானம் செய்யப்பட்டதை தொடர்ந்து அரசின் சார்பில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் தெ.பாஸ்கர பாண்டியன், இஆப., அவர்கள் இன்று (01.04.2024) அவரது உடலுக்கு மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
Next Story