அரசு மருத்துவமனையில் ரூ. 20 லட்சம் மதிப்பில் புதிய மருத்துவ கருவிகள்

திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள மருத்துவ கருவிகள் பயன்பாட்டுக்கு அர்பணிக்கப்பட்டன.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் 20 லட்சம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் வழங்கியதை மாவட்டம் ஆட்சியர் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்!
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு தனியார் நிறுவனங்கள் மூலம் சுமார் 20 லட்சம் மதிப்புள்ள கண் காது மற்றும் எக்ஸ்ரே கருவிகள் உள்ளிட்ட மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது அதனை இன்று மாவட்ட ஆட்சியர் பாஸ்கர் பாண்டியன் நேரில் சென்று ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார் மேலும் திருப்பத்தூரில் ஜோஸ் ஆலுக்காஸ் நகை கடையின் சார்பில் நான்கரை லட்சம் மதிப்பிலான போர்வைகள் மற்றும் தலையணைகளை மாவட்ட ஆட்சியரின் மூலம் திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது அப்பொழுது தலைமை மருத்துவ அலுவலர் சிவகுமார் மற்றும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் உடன் இருந்தனர்
