அரசு ஐடிஐயில் மாணவர் சேர்க்கை துவக்கம்

அரசு ஐடிஐயில் மாணவர் சேர்க்கை துவக்கம்

 மானாமதுரை அரசு ஐடிஐயில் இன்று முதல் மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.  

மானாமதுரை அரசு ஐடிஐயில் இன்று முதல் மாணவர் சேர்க்கை துவங்கியுள்ளது.
மானாமதுரை அரசு ஐ.டி.ஐ.,யில் மோட்டார் மெக்கானிக், சர்வேயர், எலக்ட்ரீசியன், ரெப்ரிஜிரேட்டர்,ஏசி மெக்கானிக்,போன்ற தொழிற்பிரிவு 2ஆண்டு படிப்பு உள்ளது. இங்கு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை, விலையில்லா சீருடை, பாடப்புத்தகங்கள், வரைபட உபகரணங்கள் மற்றும் பயிற்சி கட்டணம் முற்றிலும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 13ம் தேதி வரை ஆன்லைனில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இன்று முதல் 15ம் தேதி வரை ஐ.டி.ஐ.,யில் நேரடி சேர்க்கை நடைபெற உள்ளதாக முதல்வர் சேகர் தெரிவித்துள்ளார். பயிற்சியில் சேர விரும்பும் மாணவர்கள் 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல்,மாற்று சான்றிதழ், ஜாதி சான்றிதழ்,ஆதார் அட்டை, போட்டோ ஆகியவற்றுடன் நேரடியாக பயிற்சியில் வந்து சேர்ந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags

Next Story