அரசு ஐடிஐ மாணவர் சேர்க்கை ஜூன் 13 வரை நீட்டிப்பு; ஆட்சியர் தகவல்!

அரசு ஐடிஐ மாணவர் சேர்க்கை ஜூன் 13 வரை நீட்டிப்பு; ஆட்சியர் தகவல்!

 கொல்லிமலை அரசு ஐடிஐ.,யில் ஜூன் 13 ந்தேதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா கூறினார். 

கொல்லிமலை அரசு ஐடிஐ.,யில் ஜூன் 13 ந்தேதி வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா கூறினார்.

தமிழ்நாடு அரசு, வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் கீழ் நாமக்கல் மற்றும் கொல்லிமலையில் தொழிற்பயிற்சி நிறுவனங்கள் (ஐடிஐ) இயங்கி வருகின்றன. அரசு ஐ.டி.ஐ-ல் 2 ஆண்டு பயிற்சிகளான எலக்ட்ரீசியன், டிராப்ட்ஸ்மேன் (சிவில்), மெஷினிஸ்ட் ஆகிய பிரிவில் ஆண்கள் மற்றும் பெண்கள் சேரலாம். ஒரு ஆண்டு மெக்கானிக் ஆட்டோ பாடி ரிப்பேர் பயிற்சியில் ஆண்கள் மற்றும் பெண்கள் சேரலாம்.

பெண்களுக்கு மட்டும் ஓராண்டு பயிற்சியாக கம்ப்யூட்டர் ஆப்ரேட்டர் - புரோகிராமிங் அசிஸ்டென்ட், 2 ஆண்டு பயிற்சியாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்கள் பராமரிப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.மேலும் 2023 ம் ஆண்டில் புதிதாக துவங்கப்பட்டுள்ள இண்டஸ்ட்ரி 4.0 திட்டத்தின் கீழ் அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய இருபாலருக்குமான தொழிற்பிரிவுகளான கம்மியர் மின்சார வாகனம், 2ஆண்டுகள். தொழிற்துறை ரோபோடிக்ஸ் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப உற்பத்தி வல்லுநர்கள் - ஓராண்டு. மேம்பட்ட சிஎன்சி இயந்திர தொழில் நுட்ப வல்லுநர்கள் (இருபாலர்) - 2 ஆண்டுகள் போன்ற தொழிற்பிரிவுகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுவருகிறது.மேலும், பயிற்சி பெறும் பயிற்சியாளர்களுக்கு பயிற்சியின் போது ஆன் தி ஜாப் டிரெய்னிங், இண்டர்ன்ஷிப், இண்டஸ்ட்ரியல் ட்ரெயினிங் ஆகியவை வழங்கப்பட்டுவருகிறது.

பயிற்சி முடிந்த பின் கேம்பஸ் இண்டர்வியூ மூலம் 100 சதவீத வேலைவாய்ப்பு பெற்று தரப்படும். மேலும் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவ மாணவிகளுக்கு பயிற்சிக்காலத்தில் பயிற்சி கட்டணம் முற்றிலும் இலவசம், மாதம் ரூ.750/ உதவித்தொகையுடன் விலையில்லா சைக்கிள், பாட புத்தகங்கள், சீருடை, காலணி, வரைபடக்கருவிகள் மற்றும் இலவச பஸ்பாஸ் ஆகியவை வழங்கப்படுகின்றன. மேலும் 1-ம்வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்த பெண் பயிற்சியாளர்களுக்கு புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வழங்கப்படும். 1-ம்வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரை அரசுபள்ளியில் படித்த ஆண் பயிற்சியாளர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1000 வீதம் வழங்கப்படும் 10-ஆம் வகுப்புடன் இரண்டாண்டு ஐ.டி.ஐ பயிற்சி முடித்தவர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை மூலம் 12-ஆம் வகுப்புக்கு இணையான சான்றிதழ் வழங்கப்படும்.

இப்பயிற்சியின் இறுதியில் மத்திய அரசால் தேசிய தொழிற்சான்று (என்டிசி) வழங்கப்பட்டு வருகிறது. இந்த சான்று அகில இந்திய அளவிலும் மற்றும் மேலைநாடுகளில் வேலைவாய்ப்பு பெற வழிவகுக்கிறது. இப்பயிற்சிகளில் சேர www.skilltraining.tn.gov.in என்ற வெப்சைட்டில் ஆன்லைன் மூலமாகவும் அல்லது நாமக்கல், கொல்லிமலை அரசு ஐ.டி.ஐ நிறுவனங்களில் நேரில் சென்று ரூ. 50 செலுத்தி விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற ஜூன் 13ம் தேதி ஆகும் மேலும் விவரங்களுக்கு 04286-29959, 04286-267876, 9499055844 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு பிற விவரங்களை பெறலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story