அரசு மதுபான கடைக்கு பூட்டு - குடிமகன்கள் அதிர்ச்சி
டாஸ்மாக் கடை
காரைக்குடியில் கடந்த 7 மாதமாக டாஸ்மாக் நிறுவனம் வாடகை கொடுக்காததால் ஆத்திரமடைந்த கட்டிட உரிமையாளர் டாஸ்மாக் கடையை பூட்டி விட்டு சென்றார். இதனால் கடைக்கு வந்த குடிமகன்கள் ஏமாற்றமடைந்தனர்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடி 120 அடி சாலையில் புதிய பேருந்து நிலையம் எதிரே சூடாமணிபுரம் பகுதியைச் சேர்ந்த பன்னீர்செல்வம் என்பவருக்கு சொந்தமான கடையில் அரசு மதுபான கடை எண் 7515 மாறுதல் செய்யப்படு 7 மாதங்களாக செயல்பட்டு வருகிறது. தினமும் 2 லட்சத்திற்கு அதிகமாக மது விற்பனை நடைபெறும் நிலையில், அரசு டாஸ்மாக் நிறுவனம் சார்பில் பேசிய படி கடந்த 7 மாதமாக வாடகை கொடுக்காததால் பலமுறை கேட்டும் கிடைக்காத காரணத்தால் ஆத்திரமடைந்த கட்டிட உரிமையாளர் டாஸ்மாக் கடைக்கு சங்கிலி மூலம் மற்றொரு பூட்டு போட்டு மதுகடையை பூட்டி விட்டு சென்று விட்டார். இதனால் நண்பகல் 12 மணிக்கு திறக்க வேண்டிய மதுபான கடை தற்போது வரை திறக்கப்படவில்லை இதனால் குடிமகன்கள் வருகை தந்து மதுகடை பூட்டி இருப்பதை பார்த்து ஏமாற்றத்துடன் வேறு கடையை தேடி சென்று வருகின்றனர். வாடகை பாக்கி காரணமாக டாஸ்மாக் மதுபான கடைக்கு கட்டிட உரிமையாளர் பூட்டு போட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
Next Story