கூட்டுறவு நியாய விலை கடையில் இணைப்பதிவாளர் ஆய்வு

கூட்டுறவு நியாய விலை கடையில் இணைப்பதிவாளர் ஆய்வு
சுண்டுகுழிபட்டியில் கூட்டுறவு நியாய விலை கடையில் இணைப்பதிவாளர் ஆய்வு மேற்கொண்டார்.

. கரூர் மாவட்டம், கடவூர் தாலுக்கா, வரவணை ஊராட்சியில் உள்ள சுண்டுகுழிபட்டியில் செயல்படும் கூட்டுறவு நியாய விலை கடையை இன்று கூட்டுறவு இணைப்பதிவாளர் கந்தராஜ் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, அங்கு பணியாற்றும் ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டார். அப்போது குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் அரிசி, பருப்பு, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் இருப்பு சரியாக உள்ளதா எனவும்? கடந்த மே மாதத்திற்கான பொருள்கள் அனைத்தும் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதா? எனவும் கேள்வி எழுப்பினர்.

ஊழியர்கள், குடும்ப அட்டைதாரர்களுக்கு கடந்த மே மாதத்திற்கான பொருட்கள் அனைத்தும் வழங்கப்பட்டு விட்டது எனவும், நடப்பு ஜூன் மாதத்திற்கான பொருட்கள்தான் தற்போது விநியோகம் நடந்து கொண்டிருக்கிறது எனவும் தெரிவித்தனர்.

பின்னர் அங்கு விநியோகம் செய்யப்படும் அரிசியின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும், அறிவிப்பு பலகைகளில் உணவு பொருள் இருப்பு குறித்து குறிப்பிட வேண்டும் எனவும் இணை பதிவாளர் கந்தராஜ் தெரிவித்தார். இந்த ஆய்வின் போது கரூர், குளித்தலை பகுதிகளை சேர்ந்த இணைப்பதிவாளர்கள், பொது விநியோகத் திட்டம் பிடிஎஸ் உடன் இருந்தனர்.

கிராமத்தில் நடைபெறும் இந்த கூட்டுறவு அங்காடியில் மாவட்ட இணைப்பதிவாளர் திடீர் ஆய்வு மேற்கொண்டதால் சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

Tags

Next Story