கட்டுரைப் போட்டியில் அரசு பள்ளி மாணவி சிறப்பிடம்
தமிழ் வளர்ச்சி துறை சார்பில் நடந்த மாவட்ட அளவிலான கட்டுரை போட்டியில் வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தேர்வான சங்கரன்கோவில் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி மாணவியை பல்வேறு தரப்பினரும் பாராட்டினர்.
தென்காசி மாவட்ட தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் மாவட்ட அளவில் கவிதை, பேச்சு, கட்டுரை போட்டிகள் நடைபெற்றன. இதில், சங்கரன்கோவில் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியின் பிளஸ் 2 மாணவி ரா. மனிஷா, கட்டுரைப் போட்டியில் 2 ஆம் இடம் பெற்றாா். அவருக்கு தமிழ் வளா்ச்சித் துறை சாா்பில் ரூ.7,000-க்கான காசோலையும் சான்றிதழும் வழங்கப்பட்டன. இதையடுத்து, இவா் மாநில அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளாா். இம்மாணவியை தலைமையாசிரியா் (பொ) சுப்பையா, பயிற்சி ஆசிரியா்கள் பொன்மேகலா, வள்ளிமயில், ஆசிரியா்கள், பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினா்கள் ஆகியோா் பாராட்டினா்.
Next Story