இருசக்கர வாகன மோதி அரசு பள்ளி ஆசிரியர் பலி

இருசக்கர வாகன மோதி அரசு பள்ளி ஆசிரியர் பலி
X

சங்ககிரி அருகே இருசக்கர வாகன மோதி அரசு பள்ளி ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது

சங்ககிரி அருகே இருசக்கர வாகன மோதி அரசு பள்ளி ஆசிரியர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டம், அரசிராமணி, செட்டிப்பட்டி பெருமாள் கோவில் அருகே நடந்து சென்று கொண்டிருந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரியர் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் பரிதாபமாக உயிரிழந்தார். அரசிராமணி, செட்டிப்பட்டி நாடர் தெரு பகுதியைச் சேர்ந்தவர் ஆண்டியப்பன் மகன் அறிவழகன் (50). இவர் அரசிராமணி பேரூராட்சிக்குட்பட்ட மலைமாரியம்மன் காலனி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார். அவர் டிசம்பர் 10ம் தேதி அரசிராமணி செட்டிபட்டி பகுதியில் உள்ள பெருமாள் கோவில் பகுதியில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்துள்ளார். அப்போது அவருக்கு பின்னால் வந்த இரு சக்கர வாகனம் மோதியதில் பலத்த காயமைடந்தார். காயமடைந்த அவர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு டிசம்பர் 17ம் தேதி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.இவருக்கு ராணி என்ற மனைவியும், தேன்கனி, சரண்யா என்ற இரு மகள்களும், ஸ்ரீசரண் என்ற மகனும் உள்ளனர். இது குறித்து தேவூர் போலீஸôர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சாலை விபத்தில் உயிரிழந்த அரசு பள்ளி ஆசிரியருக்கு சேலம் மாவட்ட அனைத்து அரசு பள்ளி ஆசிரியர் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், ஆசிரியர்கள், இறுதியாக அஞ்சலி செலுத்தினர்.

Tags

Next Story