அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் நேரடி சேர்க்கை விண்ணப்ப பதிவு
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம், பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2024-25-ஆம் கல்வியாண்டிற்கான முதலாமாண்டு மற்றும் நேரடி இரண்டாமாண்டு சேர்க்கை விண்ணப்பபதிவு இணையதள வாயிலாக நடைபெற்று வருகிறது. இது தொடர்பாக கல்லூரி முதல்வர் க.பேபிலதா வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம், பாரதியார் நூற்றாண்டு நினைவு அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லூரியில் 2024-25-ஆம் கல்வியாண்டிற்கான முதலாமாண்டு (பத்தாம் வகுப்பு தேர்ச்சி) மற்றும் நேரடி இரண்டாமாண்டு சேர்க்கை (பிளஸ்-2 தேர்ச்சி அல்லது ஐ.டி.ஐ தேர்ச்சி) விண்ணப்பத்தினை https://www.tnpoly.in என்ற இணையதள முகவரியில் 10.05.2024 முதல் 24.05.2024 வரை (முதலாமாண்டு) மற்றும் 06.05.2024 முதல் 20.05.2024 வரை (நேரடி இரண்டாமாண்டு) விண்ணப்பிக்கலாம். இதில் முதலாமாண்டு சேர விரும்பும் மாணவிகள் தங்களது பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், சாதிசான்றிதழ், விண்ணப்பதாரர் புகைப்படம் ஆகியவற்றை தேவையான அளவுகளில் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளவாறு பதிவேற்றம் செய்ய வேண்டும்.
மேலும் நேரடி இரண்டாமாண்டு சேர விரும்பும் மாணவிகள் பிளஸ்-2 மதிப்பெண் சான்றிதழ் அல்லது ஐ.டி.ஐ மதிப்பெண் சான்றிதழ், சாதிசான்றிதழ், மற்றும் விண்ணப்பதாரர் புகைப்படம் ஆகியவற்றை தேவையான அளவுகளில் இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளவாறு பதிவேற்றம் செய்ய வேண்டும். இதற்கான விண்ணப்ப பதிவு கட்டணம் ரூ.150/- ஆகும். SC/ST மாணவியர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது. மற்ற மாணவிகள் விண்ணப்ப கட்டணத்தை டெபிட் கார்டு, (ATM Card) கிரெடிட் கார்டு மற்றும் இணையதள வங்கி சேவை மூலம் செலுத்தலாம். கல்லூரி குறியீட்டு எண் 178 ஆகும். எங்கள் கல்லூரியில் MECH, EEE, ECE, ICE, CE, G.TECH ஆகிய பாடப்பிரிவுகள் உள்ளன. நேரடியாக விண்ணப்பிக்க விரும்பும் மாணவிகள் எங்கள் கல்லூரிக்கு வந்து இலவசமாக விண்ணப்பிக்கலாம்.
மேலும், தகவல்கள் பெற 97155263364, 9486195488, 04632-271238 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். நேரடி இரண்டாமாண்டு விண்ணப்பிக்க 20.05.2024 அன்று கடைசி நாள் மற்றும் முதலாமாண்டிற்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 24.05.2024. விண்ணப்பிக்கும் அனைவருக்கும் அவரவர் விரும்பிய பாடப்பிரிவுகளில் கண்டிப்பாக இடம் ஒதுக்க ஆவண செய்யப்படும், மேலும் கல்லூரியில் சேரும் மாணவியர்களுக்கு ஒரு வருடத்திற்கான வளர்ச்சிக் கட்டணம் ரூ.2200/- மட்டுமே இன்னபிற கட்டணங்கள் கிடையாது என கல்லூரி முதல்வர் க.பேபிலதா தெரிவித்துள்ளார்.