யானை மிதித்து அரசு ரப்பர் கழகத் தோட்டத் தொழிலாளி உயிரிழப்பு

யானை மிதித்து அரசு ரப்பர் கழகத் தோட்டத் தொழிலாளி உயிரிழப்பு

மயிலார் அரசு ரப்பர் கழக தோட்டத் தொழிலாளி ஒருவர், யானை மிதித்ததில் உயிரிழந்தார்.  

மயிலார் அரசு ரப்பர் கழக தோட்டத் தொழிலாளி ஒருவர், யானை மிதித்ததில் உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம் பேச்சிப்பாறை கோதையார் கீரிப்பாறை மயிலார் உள்ளிட்ட பகுதிகளில் அரசு ரப்பர் தோட்டங்கள் உள்ளன இந்த தோட்டங்களில் ஆயிரத்துக்கு மேற்பட்ட தொழிலாளர்கள் ரபர் பால் வெட்டும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை மயிலார் பகுதியில் உள்ள அரசு ரப்பர் தோட்டத்தில் கோதையார் பகுதியை சேர்ந்த மணிகண்டன் என்ற தொழிலாளி ரப்பர் பால் வெட்டும் பணிக்குச் சென்றுள்ளார் தோட்டத்தில் பால் வெட்டிக் கொண்டிருந்த போது அங்கு வந்த காட்டு யானை கூட்டம் திடீரென மணிகண்டனை துரத்தியது யானையைப் பார்த்ததும் மணிகண்டன் கூச்சலிட்டவாறு ஓடி உள்ளார்

ஆனால் யானை விடாமல் துரத்தி சென்று அவரை மிதித்து கொன்றது. இதைப் பார்த்த சக ஊழியர்கள் அதிகாரிகளுக்கும் வனத்துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறை ஊழியர்கள் மற்றும் போலீசார் மணிகண்டன் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர் அரசு ரப்பர் தோட்டத்தில் தொழிலாளி யானை தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது

Tags

Next Story