Gr-II/II A-க்கான இலவச பயிற்சி வகுப்பு மற்றும் மாதிரித் தேர்வுகள் 21.07.2025 முதல் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறவுள்ளது

X
மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக TNPSC, TNUSRB, மற்றும் TRB போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகின்றது. தற்போது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் Gr-II/IIA-க்கான அறிவிக்கை 15.07.2025 அன்று வெளியிடப்பட்டுள்ளது. முதல்நிலை எழுத்துத் தேர்வு 28.09.2025 அன்று நடைபெறும். இத்தேர்வுக்கு விண்ணப்பித்திருக்கும் விருதுநகர் மாவட்ட தேர்வர்கள் பயன்பெறும் பொருட்டு விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலமாக இலவச பயிற்சி வகுப்பு மற்றும் 20 இலவசப் பாட வாரியான தேர்வு மற்றும் முழுமாதிரித் தேர்வுகள் 21.07.2025 முதல் அலுவலக வளாகத்தில் நடைபெறவிருக்கிறது. இத்தேர்வில் கலந்துகொள்ள விருப்பம் உடையவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் வாயிலாகவும் அல்லது விருதுநகர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரடியாக தெரிவிக்கலாம். எனவே TNPSC Gr-II/IIA தேர்வுக்கு தயாராகும் தேர்வர்கள் இந்த தேர்வில் கலந்துக்கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா தெரிவித்துள்ளார்.
Next Story

