சேலத்தில் பட்டதாரி பெண் தற்கொலை

சேலத்தில் பட்டதாரி பெண் தற்கொலை

தற்கொலை

சேலத்தில் பட்டதாரி பெண் தற்கொலையை ஆர்டிஓ விசாரணை.
சேலம் அழகாபுரம் பகுதியை சேர்ந்தவர் சாமி சக்தி, தனியார் வங்கி ஊழியர். இவருடைய மனைவி சோபியா (வயது 27). பட்டதாரியான இவருக்கும், கணவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று முன்தினம் இருவருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது சோபியா, திடீரென்று வீட்டில் உள்ள ஒரு அறைக்கு சென்று உள்புறம் பூட்டிக்கொண்டார். வெகு நேரம் ஆகியும் கதவு திறக்காததால் கணவர் மற்றும் உறவினர்கள் கதவை தட்டினர். ஆனால் கதவு திறக்க வில்லை. பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அவர் தூக்கில் தொங்கிக்கொண்டிருப்பதை பார்த்து கதறி துடித்தனர். அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். டாக்டர்கள் பரிசோதனை நடத்திய போது சோபியா ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது. இது குறித்து அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருமணம் ஆகி 11 மாதமே ஆவதால், சோபியா தற்கொலை செய்து கொண்டது குறித்து உதவி கலெக்டர் அம்பாயிரநாதன் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags

Next Story