பட்டதாரி மர்மமான முறையில் உயிரிழப்பு - போலீசார் விசாரணை

பட்டதாரி மர்மமான முறையில் உயிரிழப்பு - போலீசார் விசாரணை

 மர்மமான முறையில் உயிரிழப்பு

உளுந்துார்பேட்டை அடுத்த பாலி பகுதியைச் சேர்ந்தவர் காந்தி மகன் அசோக்குமார், 30; ஏரோநாட்டிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ளார். இவர், தியாகதுருகம் காவல் நிலையம் எதிரே அப்துல் கலாம் நர்சிங் இன்ஸ்டியூட் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் மாலை 5:30 மணியளவில் வீட்டில் தனது அறையில் வாயில் நுரை தள்ளிய நிலையில் விழுந்து கிடந்தார். உடன் அவரை மீட்டு, முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மாலை 5:30 மணியளவில் இறந்தார். இதுகுறித்து எடைக்கல் போலீசார் வழக்குப் பதிந்து அசோக்குமார் இறந்ததற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags

Next Story