கே.எஸ்.ரங்கசாமி தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
திருச்செங்கோடு, கே.எஸ்.ரங்கசாமி தொழில்நுட்பக் கல்லூரியின் 25ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா கல்லூரி கே.எஸ்.ஆர். அரங்கத்தில் நடைபெற்றது. கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்களின் தலைவர் சீனிவாசன் பட்டமளிப்பு விழாவை துவக்கி வைத்தார். முதல்வர் கோபாலகிருஷ்ணன் அனைவரையும் வரவேற்று ஆண்டு அறிக்கையை சமர்ப்பித்தார். சிறப்பு விருந்தினராக புதுதில்லி, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏஐசிடிஇ), தலைவர் டி.ஜி. சீத்தாராம் மற்றும் சென்னை, ஸ்ட்ராடின்ஃபினிட்டி இன்க்., நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி பாலசுப்ரமணியம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
சிறப்பு விருந்தினர் சீத்தாராம் தனது உரையில் கே.எஸ்.ஆர் கல்லூரி கிராமப்புற பின்னணியில் அமைந்துள்ள நிறுவனம், ஏஐசிடிஇயின் கொள்கைகளை முழுமையாகப் பின்பற்றுவதால் தான் உயர்ந்து வருகின்றது, மாணவர்கள் தங்கள் வாழ்க்கையில் உள்ள சவால்களை எதிர்கொள்ளும் திறன், படைப்பாற்றல் போன்றவற்றை வளர்க வேண்டும் என்று வலியுறுத்தினார். சேட் ஜிபிடி போன்ற படைப்பாற்றல் மற்றும் வேகம் குறித்து அவர் விளக்கினார்.
ஏஐசிடிஇ-யுடன் இணைந்த கல்லூரிகள் ஒவ்வொரு ஆண்டும் 15 லட்சம் பொறியாளர்களை உருவாக்கி வருவதாகவும், இதன் மூலம் 2047-ஆம் ஆண்டுக்கு முன்பே நமது நாட்டை வளர்ந்த நாடாக மாற்ற முடியும் என்று கூறினார். கெளரவ விருந்தினர் பாலசுப்ரமணியம் தனது உரையில், மாணவர்கள் சிக்கலைத் தீர்க்கும் திறன் மற்றும் சிறந்த வேலை வாய்ப்புகளுக்குத் தகவமைத்துக் கொள்ளும் திறன் ஆகியவற்றில் திறமையானவர்களாக இருக்க வேண்டும் என்று அவர் தெளிவுபடுத்தினார். 32 பட்டதாரிகள் பதக்கங்களையும், 650 பட்டதாரிகள் பட்டம் பெற்றனர். பட்டமளிப்பு உறுதிமொழி ஏற்கப்பட்டதும், பட்டமளிப்பு விழா கலைக்கப்பட்டது. விழாவில் கல்வி நிறுவன இயக்குனர்கள், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, டீன்கள், கல்லூரி இயக்குனர்கள், துறை தலைவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.