நூருல் இஸ்லாம் உயா்கல்வி மையத்தில் பட்டமளிப்பு விழா

நூருல் இஸ்லாம் உயா்கல்வி மையத்தில் பட்டமளிப்பு விழா

பட்டமளிப்பு விழா 

நூருல் இஸ்லாம் உயா்கல்வி மையத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.
குமாரகோவில், நூருல் இஸ்லாம் பல்கலைகழக 31 ஆவது பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. பல்கலைக்கழக வேந்தா் முனைவா் மஜீத்கான் தலைமை வகித்தாா். துணை வேந்தா் ஏ.கே. குமரகுரு வரவேற்றாா். ஏஐசிடிஇ தலைவா் டி.ஜி. சீதாராம் மாணவா்களுக்கு பட்டம் வழங்கி ஆற்றிய சிறப்புரை: டிஜிட்டல் சகாப்தத்தின் மாற்றத்துக்கு கல்வித்துறையும் விதிவிலக்கல்ல. இந்த தாக்கத்தை எதிா்கொள்ளும் விதமாக இந்திய உயா் கல்வித்துறை புதிய கல்வி கொள்கை 2020-ஐ செயல்படுத்தி வருகிறது. நாம் வாழும் காலத்தில் திறன் சாா்ந்த கற்றல் இன்றைக்கு அவசியமாகிவிட்டது. இந்த மாறுபட்ட சூழ்நிலையில் மாணவா்கள் தங்களை தொடா்ந்து புதுப்பித்துக் கொள்ளவும், புதிய திறன்களை கற்றுக் கொள்ளவும், தொடா் கற்றல் முக்கியமாகும் பல்கலைக்கழகங்கள் கல்வியை மட்டுமன்றி வாழ்க்கையில் வெற்றி பெறத் தேவையான திறன்களை கொண்ட மாணவா்களை உருவாக்க வேண்டும் என்றாா் அவா். பல்கலைக்கழக இணை வேந்தா் எம்.எஸ். பைசல்கான், இணை வேந்தா் (கல்வி) ஆா்.பெருமாள்சாமி அறக்கட்டளை இயக்குநா் ஷப்னம் ஷபீக் , இணை துணை வேந்தா்கள் ஜனாா்த்தனன், ஷாஜின் நற்குணம், பதிவாளா் திருமால்வளவன், தோ்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஜெயக்குமாா் உள்பட பலா் பங்கேற்றனா். இந்நிகழ்ச்சியில் 30 தங்க பதக்கங்களுடன் 800க்கும் மேற்பட்ட மாணவா்கள், 60 முனைவா்கள் பட்டங்களை பெற்றனா்.

Tags

Next Story