சேலம் சோனா கலை அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
பட்டமளிப்பு விழா
சேலம் சோனா கலை அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழாவில் 822 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
சேலம் சோனா கலை அறிவியல் கல்லூரியில் மூன்றாவது பட்டமளிப்பு விழா நடந்தது. சோனா கல்வி நிறுவனங்களின் தலைவர் வள்ளியப்பா தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் காதர்நவாஸ் வரவேற்றார். துணைத்தலைவர்கள் சொக்கு வள்ளியப்பா, தியாகு வள்ளியப்பா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரியார் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் குழந்தைவேலு, பெங்களூரு டெசோல்வ் செமிகண்டக்டர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் இணை நிறுவனர் வீரப்பன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். தொடர்ந்து அவர்கள், 2020-2023-ம் கல்வியாண்டில் படித்த 822 மாணவ, மாணவிகளுக்கும், முனைவர் பட்டம் பெற்ற பேராசிரியர்களுக்கும் பட்டங்களை வழங்கி பாராட்டு தெரிவித்தனர். இதையடுத்து சோனா கல்வி நிறுவனங்களின் சார்பில் மாணவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரமும், இரண்டாம் இடம் பெற்ற மாணவர்களுக்கு தலா ரூ.7,500-ம், மூன்றாம் இடம் பெற்ற மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரமும், மற்ற தர வரிசை பெற்ற மாணவர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் என மொத்தம் ரூ.1 லட்சத்து 60 ஆயிரம் வழங்கி கவுரவிக்கப்பட்டது. மேலும், பல்கலைக்கழக அளவில் தர வரிசையில் சிறப்பிடம் பெற்ற 37 மாணவர்களுக்கு ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள தங்கப்பதக்கம் என ரூ.1 லட்சத்து 85 ஆயிரம் வழங்கப்பட்டது.
Next Story