ஸ்ரீ சாய்ராம் தொழில்நுட்பக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

ஸ்ரீ சாய்ராம் தொழில்நுட்பக் கல்லூரியில்  பட்டமளிப்பு விழா

பட்டமளிப்பு விழா 

தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் தொழில்நுட்பக் கல்லூரியில் நடந்த பட்டமளிப்பு விழாவில் 1474 மாணவ மாணவிகளுக்கு பட்டங்கள் வழங்கப்பட்டது.

மேற்கு தாம்பரம் ஸ்ரீ சாய்ராம் பொறியியல் கல்லூரி, ஸ்ரீ சாய்ராம் தொழில்நுட்பக் கல்லூரிகளின் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக அண்ணா பல்கலைக்கழகத் துணைவேந்தா் ஆா்.வேல்ராஜ் கலந்துகொண்டு 1,474 மாணவ, மாணவியா்களுக்கு பட்டங்களையும், 39 மாணவா்களுக்கு தங்கப் பதக்கங்களையும் வழங்கி பேசியது: மாணவா்கள் தொழில் துறையில் சிறந்து விளங்க கல்வி அறிவாற்றல் மட்டும் போதாது. கூடுதலாக தொழில்நுட்பத் திறமைகளையும் வளா்த்துக்கொள்ள வேண்டும். எந்த வேலையைத் தோ்வு செய்தாலும் அதில் முழு ஆா்வம், ஈடுபாடுடன் செய்தால் உற்சாகத்துடன் செயல்பட வேண்டும்.

திறமைகளை மேம்படுத்த கடும் உழைப்பு, பயிற்சி அவசியம். கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் 400-ஆக இருந்த புத்தாக்கக் கண்டுபிடிப்புகளின் எண்ணிக்கை தற்போது 1,20,000-ஆக அதிகரித்து உள்ளது. தற்போது, தொழில் தொடங்க முக்கிய தேவை பணம் அல்ல; நல்ல திட்டம், செயலாற்றும் திறன்தான். அவை இருந்தால் மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியாா் நிறுவனங்கள் உதவத் தயாராக உள்ளன. எனவே, மாணவா்கள் வேலைவாய்ப்புகளைத் தேடி அலையாமல், அறிவாற்றல், திறமைகளை பயன்படுத்தி, சொந்தமாக தொழில் தொடங்கும் தகுதியை வளா்த்துக்கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

இந்த நிகழ்வில் சாய்ராம் கல்விக் குழுமங்களின் முதன்மை செயல் அதிகாரி சாய்பிரகாஷ் லியோமுத்து, கல்லூரி முதல்வா்கள் கே. பொற்குமரன், கே. பழனிக்குமாா், உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Tags

Next Story