ராசிபுரம் ஸ்ரீவித்யாமந்திர் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா.

ராசிபுரம் ஸ்ரீவித்யாமந்திர் கல்வியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ஸ்ரீவித்யாமந்திர் கல்வியியல் கல்லூரியின் 12-வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் கல்லூயின் தலைவர் கே.குமாரசாமி தலைமை வகித்தார். முதல்வர் கே.கவிதா வரவேற்றார். கல்விக்குழுத் தலைவர் சி.நடராஜன் சிறப்பு விருந்தினரை அறிமுகம் செய்து வைத்தார். விழாவில் தமிழ்நாடு கல்வியியல் கல்லூரியின் முன்னாள் துணைவேந்தர் என்.பஞ்சநதம் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று 100-க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்களுக்கு பட்டங்கள் வழங்கிப் பேசினார். விழாவில் பேசிய அவர், கல்வி பணியில் ஈடுபடப்போகும் மாணவர்கள் தேசப்பற்று, இறைப்பற்று, நல்லொழுக்கத்துடன் கூடிய கல்வி பெறுவதை பெருமையாக கொள்ள வேண்டும். வருங்கால தூண்களான இளைஞர்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர் பணியை மேற்கொள்ளப்போகும் நீங்கள் விவாதித்தல் முறையில் கற்பித்தல், விளையாட்டு முறையில் கற்பித்தல், ஆடல், பாடல் முறையில் கற்பித்தல் என பல்வேறு முறைகளில் கற்பிக்க வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டு கற்பித்தல் முறைகளை பின்பற்றிட வேண்டும். நுண் சிந்தனை திறன், மேலாண்மைத்திறன், அனுபவத்திறன், தொழில்நுட்பத்திறன் போன்றவற்றை வளர்த்துக்கொள்வதுடன், தற்போதைய சூழ்நிலையை கையாளத்தெரிந்தவர்களாகவும் இருக்க வேண்டும். தேசியக் கல்விக்கொள்கை 2020-ன்படி கற்பித்தல் முறைக்கு ஏற்றவாறு தங்களை அனைவரும் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார். விழாவில் ஸ்ரீவித்யாமந்திர் கல்வி நிறுவனங்களின் தலைவர் என்ஜினியர் என்.மாணிக்கம் பட்டம் பெற்ற மாணவர்களை உறுதிமொழி ஏற்க வைத்தார். விழாவில் விவேகானந்தா கல்வி அறக்கட்டளை செயலர் எஸ்.சந்திரசேகரன், பொருளாளர் வி.ராமதாஸ், ஸ்ரீவித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி செயலர் வி.சுந்தராஜன், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் கந்தசாமி, முதல்வர் முனைவர் வி.கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட பலரும் இதில் பங்கேற்றனர்.

Tags

Next Story