ஆனந்தா எஜுகேஷன் இன்ஸ்டியூசன் சார்பில் பட்டமளிப்பு விழா
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த பட்டணம் ஆனந்தா எஜுகேஷன் இன்ஸ்டியூசன் சார்பில், பட்டணம் ரங்கசாமி தனியார் திருமண மண்டபத்தில், பட்டமளிப்பு விழா, வாகன தினம் மற்றும் தனித்திறன் எக்ஸ்போ நடைபெற்றது. இவ்விழாவை, ராசிபுரம் தங்கம் அசோசியேட் நிறுவனர் இன்ஜினியர் மாணிக்கம் துவக்கி வைத்தார். முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் உதயக்குமார், சேலம் மாவட்டம் மேச்சேரி மீனம்பார்க் எஜுகேஷன் இன்ஸ்டியூசன் முதல்வர் பிரமோத், செயலாளர் திவ்யபாலா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். முதலில் நடைபெற்ற வாகன தினத்தில் மாணவ, மாணவியர் தான் செல்லும் பள்ளி வாகனங்களுக்கு மரியாதை செலுத்தினர். தொடர்ந்து, இவ்விழாவையொட்டி நடந்த போட்டியில் வெற்றி பெற்ற ஜூனியர் கேஜி மாணவர்களுக்கு ரிவார்ட் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, சீனியர் கேஜி மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா நடந்தது. சிறப்பு விருந்தினர்கள் பட்டம் வழங்கி மாணவ, மாணவியரை கெளரவப்படுத்தினார். இதனை தொடர்ந்து, 1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு தனித்திறன் எக்ஸ்போ நடைபெற்றது. இதில், கதை, கவிதை, ஓவியம் உள்ளிட்ட பல்வேறு தனித்திறன் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் பரிசு, பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினர். மேலும் மாணவர்கள் அறிவியல் திறன் மேம்பட பல்வேறு சிறப்பான செயல் விளக்கத்துடன் கூடிய பொருட்களை மாணவர்கள் எடுத்துக்காட்டுக்கு வைத்திருந்தனர். அதில் குறிப்பாக பசுமை வீடு, சிக்னல் லைன், போக்குவரத்து நெரிசல் குறைக்கும் தானியங்கி கட்டுப்பாடு, சோலார் மின்விளக்கு வீடு, நவ தானியங்களில் இயற்கை சூழல் உடன் கூடிய அழகான ஓவியங்கள், மின்சாரம் இல்லாமல் ஒலிகள் எழுப்பும் கருவிகள், இதயத்துடிப்பு வரைபடங்கள், பள்ளி கல்லூரி வரைபடங்கள், ஈஷா யோகா மையத்தில் உள்ள ஆதியோகி சிவன் போன்ற பல்வேறு அறிவியல் நுட்பம் கொண்ட பலவற்றை மாணவ மாணவிகள் சிறப்பாக செய்துள்ளனர். இதை சிறப்பு விருந்தினர்கள் பள்ளி நிர்வாகிகள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் என அனைவரும் பார்த்து அவர்களை பாராட்டினர். இந்த விழாவில் பள்ளி நிர்வாகி சக்தி, ஆதி, மற்றும் ரமேஷ் குமார், அருண், ரஞ்சித், மற்றும் பட்டணம் பேரூராட்சி துணை தலைவர் பொன்.நல்லதம்பி, மேலும் ஆசிரியர் பெருமக்கள், பள்ளி அலுவலக பொறுப்பாளர்கள், என பலர் கலந்து கொண்டனர்.