121 கிராம ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம்

121 கிராம ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம்

மாவட்ட ஆட்சித் தலைவர் கற்பகம்

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு இன்று அனைத்து ஊராட்சிகளிலும் கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
உள்ளாட்சிகள் தினமான நவம்பர்-1ம் தேதி இன்று பெரம்பலூர் மாவட்டத்திலுள்ள 121 கிராம ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர்களால் நடத்தப்பட உள்ளது.ஊராட்சிமன்ற தலைவர்கள் கிராம சபைக் கூட்டத்திற்கு தலைமையேற்க வேண்டும். ஊராட்சி மன்ற துணைத்தலைவர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் கிராம சபைக் கூட்டத்தில் தவறாது கலந்து கொண்டு, கிராம மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை கேட்டறிதல் வேண்டும். அரசு நலத் திட்டங்களை கூட்டத்தில் வழங்குதல் வேண்டும். அரசு நிர்வாகத்தில் உள்ள குறைபாடுகளை மக்களிடையே கேட்டறிதல் வேண்டும். மேலும், கிராமசபைக் கூட்டத்தில் . முதல்வருக்கு நன்றி தெரிவித்தல். கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல். கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கும் மகளிர் சுயஉதவி குழுக்களை கௌரவித்தல். வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள். மற்றும் இணையவழி வீட்டு வரி/சொத்து வரி செலுத்துதல். ஆகியவை பற்றி விவாதிக்க வேண்டும் உள்ளாட்சிகள் தினமான நவம்பர் 1ம் தேதி அன்று கிராம சபைக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சித்தலைவர்கள், துணைத்தலைவர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் கிராம சபா உறுப்பினர்கள் அனைவரும் கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்க வேண்டும். இதில் வாக்களர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு கிராம ஊராட்சிகளின் வெளிப்படையான நிர்வாகத்திற்கும், ஆக்கப்பூர்வமான ஊராட்சி நிர்வாகம் மற்றும் ஊராட்சியில் இதர பொருட்கள் குறித்தும் விவாதித்திட அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித் தலைவர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story