92 கிராம ஊராட்சிகளில் கிராமசபைக் கூட்டம் - ஆட்சியர் தகவல்
ஆட்சியர் கற்பகம்
பெரம்பலூர் மாவட்டம் தூய்மை பாரத இயக்கம் திட்டம் தொடர்பாக 05.12.2023 அன்று 92 கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடைபெறவுள்ளது. இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் தெரிவித்துள்ளதாவது: பெரம்பலூர் மாவட்டத்தில் 05.12.2023 அன்று தூய்மை பாரத இயக்கம் திட்டம் தொடர்பாக 92 கிராம ஊராட்சிகளில் சிறப்பு கிராமசபைக் கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர்களால் நடத்தப்பட உள்ளது. ஊராட்சிமன்ற தலைவர்கள் கிராம சபைக் கூட்டத்திற்கு தலைமையேற்க வேண்டும். ஊராட்சி மன்ற துணைத்தலைவர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் கிராம சபைக் கூட்டத்தில் தவறாது கலந்து கொண்டு, கிராம மக்களுக்கு என்னென்ன தேவை என்பதை கேட்டறிதல் வேண்டும்.
சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சித்தலைவர், துணைத்தலைவர், மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஒன்றியக்குழு தலைவர், துணைத்தலைவர், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் மற்றும் கிராம சபா உறுப்பினர்கள் அனைவரும் கிராம ஊராட்சிகளில் நடைபெறும் கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்க வேண்டுமென கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
அனைத்து துறை வாரியான அலுவலர்கள் தவறாது கிராமசபைக் கூட்டங்களில் கலந்து கொள்வதோடு, துறைத் தொடர்பான திட்டங்கள் பொதுமக்கள் நன்கு அறியும் வகையில் கூறிட வேண்டும். கிராம சபைக்கூட்டம் நல்ல முறையில் நடைபெறுவதை கண்காணிக்க வட்டாரம் வாரியாக மாவட்ட நிலை அலுவலர்கள் மண்டல அலுவலர்களாக கிராம சபைக்கூட்டம் நடைபெறுவதை மேற்பார்வையிட நியமிக்கப்பட்டுள்ளனர். சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம சபா உறுப்பினர்களாகிய வாக்களர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு கிராம ஊராட்சிகளின் வெளிப்படையான நிர்வாகத்திற்கும், ஆக்கப்பூர்வமான ஊராட்சி நிர்வாகத்திற்கும் வழிவகுக்கும் வகையில், அனைவரும் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.