ராமநாதபுரம்: கிராம சபை கூட்டம்

ராமநாதபுரம்:  கிராம சபை கூட்டம்

கிராம சபை கூட்டம்

ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை ஊராட்சியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் காரி கூட்டத்தில் ஊராட்சித் தலைவர் யாழினி புஷ்பவல்லி தலைமையில் நடந்தது.
ராமநாதபுரம் மாவட்டம், சக்கரக்கோட்டை ஊராட்சியில் குடியரசு தின விழாவை முன்னிட்டு சிறப்பு கிராம சபை கூட்டம் ஊராட்சி தலைவர் யாழினி புஷ்பவள்ளி தலைமையில் நடந்தது. தொழு நோய் ஒழிப்பு விழிப்புணர்வு மற்றும் தேசிய வாக்காளர் உறுதிமொழி எடுத்தபின் நோய் எதிர்ப்பு அயோடின் உப்பு பயன்படுத்த வேண்டும். மேலும், குடிநீர் சாலை வசதி மின்சார வசதிகளை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும் பெநகராட்சியில் இணைப்பு குறித்து நடவடிக்கை எடுக்கும் பொழுது தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட பயனாளிகளுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக் கொடுத்தபின்பு இதை பெருநகராட்சியில் சேர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், சக்கரக்கோட்டை ஊராட்சிக்கு குழாய் மூலம் எரிவாயு திட்டம் தேவையில்லை என்பதை மக்கள் வலியுறுத்தி வந்தனர்.குமரய்யா கோயில் பஸ் நிறுத்தத்தில் அடிக்கடி விபத்து ஏற்பட்டுவருவதால் ஸ்டாப் அமைத்து இந்தியன் ஓவர்சீஸ் பேங்க் அருகே நிறுத்தப்பட வேண்டும். போன்ற தீர்மானம் கொண்டுவரப்பட்டது. சக்கரக்கோட்டை அரசு தமிழ் வழி உயர்நிலைப் பள்ளியை ஆங்கில வழி கல்வியாக தரம் உயர்த்த வேண்டும் போன்ற கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டது.

Tags

Next Story