பணம் கேட்டு பாட்டியை தாக்கிய பேரன் கைது

X
பணம் கேட்டு பாட்டியை தாக்கிய பேரன் கைது
கள்ளக்குறிச்சி அருகே பணம் கேட்டு பாட்டியை தாக்கிய பேரன் கைது.
கள்ளக்குறிச்சி அடுத்த நீலமங்கலம் கூட்ரோட்டை சேர்ந்தவர் ஞானப்பிரகாசம் மனைவி புஷ்பகாந்தி,77. இவரது பேரன் சுகிர்தராஜ்,18. இவர், செலவுக்கு பணம் கேட்டு, தாய் ஜெயக்குமாரி, பாட்டி புஷ்பகாந்தியிடம் அடிக்கடி தகராறு செய்வது வழக்கம். பணம் தரவில்லையெனில் வீட்டில் உள்ள பொருட்களை சுகிர்தராஜ் சேதப்படுத்தி வந்தார். நேற்று முன்தினம் சுகிர்தராஜ் தனது புஷ்பகாந்தியிடம் பணம் கேட்டு தகராறு செய்தார். அவர், தர மறுத்ததால், வீட்டில் இருந்த டிவி., வாஷிங் மிஷின் ஆகியவற்றை உடைத்து சேதப்படுத்தினார். தடுக்க முயன்ற புஷ்பகாந்தியை திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தார். புகாரின்பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து சுகிர்தராஜை கைது செய்தனர்.
Next Story
