மதுரையில் கிரானைட் குவாரிகள் திறக்கப்படும்: பாஜக வேட்பாளர்

மதுரையில் கிரானைட் குவாரிகள் திறக்கப்படும்: பாஜக வேட்பாளர்

பாஜக வேட்பாளர் 

மதுரையில் கிரானைட் குவாரிகள் திறக்கப்படும் என பாஜக வேட்பாளர் ராம ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம் மேலூரில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி சார்பில் மதுரை பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் அறிமுக கூட்டம் வேலூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த தமாக, பாமக, அமமுக உள்ளிட்ட கூட்டணி கட்சி மாவட்ட நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற கூட்டத்தில் பேசிய மதுரை பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் இராம.சீனிவாசன்.மதுரையில் தொழில்துறை, பொருளாதாரம் வேலைவாய்ப்பு உள்ளிட்ட வளர்ச்சிகள் எதுவும் இல்லாமல், இங்கு உள்ளவர்கள் வேலை தேடி வெளி மாவட்டங்களுக்கும், வெளி மாநிலங்களுக்கும் சென்று வருகின்றனர். இதற்கு 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த, திராவிட கட்சிகளை காரணம். நாம் சரியான கட்சியை தேர்ந்தெடுக்காததும் முக்கிய காரணம். தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக மதுரை மிகப்பெரிய நகராக இருந்த நிலையில்,

தற்போது கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களை குறிப்பிட்டு பேசும்படியாக உள்ளது. மதுரையில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிப் பெற்றால், தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வளர்ச்சி அடைவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.

எம்டியாக (காலியாக) உள்ள நான். மதுரை மக்களின் பாக்கெட்டை வளர்ச்சியால் நிரப்பி வைத்து தான் செல்வேன். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை வருவதற்காக மத்திய அமைச்சர்களுடன் பேசி அதற்கான முயற்சியை மேற்கொண்டவன் நான். இந்தியாவில் டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை 600 படுக்கை வசதிகளுடன் மிகப்பெரிய மருத்துவமனையாக உள்ள நிலையில், மதுரையில் 225 ஏக்கர் பரப்பளவில்,

1300 படுக்கை வசதிகளுடன், மிகப்பெரிய எய்ம்ஸ் மருத்துவமனையாக இரண்டு ஆண்டுகளில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டி முடிக்கப்படும். இது பாரதிய ஜனதா கட்சியால் மதுரைக்கு பெருமை. எனவே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற அனைவரும் செயல் படுவோம் என்று அப்போது பேசினார்... இதனை தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர்... மதுரை மாவட்டத்தில் வேலைவாய்ப்பை அதிகரிக்கும் விதமாக மூடப்பட்டுள்ள குவாரிகள் திறக்கப்பட வேண்டும். அதனை அரசை ஏற்று நடத்த வழிவகை செய்ய வேண்டும்,

கிரானைட் குவாரி முறைகேடு விவகாரத்தில் குற்றவாளிகள் நிச்சயமாக தண்டிக்கப்பட வேண்டும். மூடப்பட்டுள்ள குவாரிகளால் பலர் தற்கொலைக்கு முயன்று வருகின்றனர். பலர் புலம் பெயர்ந்து உள்ளனர். மீண்டும் அரசியல் பொதுத்துறை நிறுவனமான தமிழ் மூலம் குவாரிகள் திறக்கப்பட்டு நடத்த வேண்டும் அதில் முறையீடோ மற்றும் ஊழலோ நடைபெற வாய்ப்பு இல்லை. கச்சத்தீவு விவகாரத்தில், எப்படி பேச்சுவார்த்தை முழுமையாக கொடுக்கப்பட்டதோ அதே பேச்சுவார்த்தை மூலமாக திரும்ப பெற முடியும், நகையை அடமானம் வைப்பது போல கச்சத்தீவை கொடுத்தது காங்கிரஸ், ஒத்துழைப்பு கொடுத்தது திமுக. தற்போது கச்சத்தீவை மீட்க பாஜக என்ன செய்வது என்று கேள்வி கேட்டு வருகின்றனர்.

மோடி தலைமையில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கும் பட்சத்தில் இறையாண்மை உள்ள இலங்கையுடன் பேசி, நல்லெண்ண அடிப்படையில் கட்சதீவை மீட்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று அப்போது செய்தியாளர்களிடம் தெரிவித்தார்...

Tags

Next Story