திண்டுக்கல் மாவட்ட திராட்சை விவசாயிகள் மகிழ்ச்சி

திண்டுக்கல் மாவட்ட திராட்சை விவசாயிகள் மகிழ்ச்சி

திராட்சை தோட்டம்

திண்டுக்கல் அருகே சிறுமலை அடிவாரப் பகுதிகளில் திராட்சை பழங்கள் காய்த்துக் குலுங்குவதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல் முதல் கொடை ரோடு வரை சிறுமலை அடிவாரப் பகுதிகளில் உள்ள கிராமங்களான வெள்ளோடு, நரசிங்கபுரம், கோம்பை, ஜாதிக் கவுண்டன்பட்டி, காந்திகிராமம், அம்பாத்துறை, அமலி நகர், ஊத்துப்பட்டி, மெட்டூர் உள்ளிட்ட மலையடிவாரப் பகுதிகளில் உள்ள விளைநிலங்களில் பந்தல் அமைத்து திராட்சை பயிரிட்டுள்ளனர்.

மழை பெய்வதால் பழங்களில் நீர்கோர்த்து வெடிப்பு ஏற்பட்டுச் சேதத்தை விளைவிக்கும். இதனால் பழங்கள் கொடியில் இருந்து உதிர்ந்துவிடும். மேலும் தரமான பழங்கள் விளைச்சல் இருக்காது.

விவசாயிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். கடந்த ஆண்டு ஒரு கிலோ திராட்சை ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனையான நிலையில் தற்போது விளைச்சல் அதிகரிப்புக்கு ஏற்ப வெயிலின் தாக்கத்தால் தேவையும் அதிகரித்துள்ளதால் ஒரு கிலோ ரூ.80 முதல்ரூ.100 வரை விற்பனையாகிறது. இதனால் வருவாய் அதிகரித் துள்ளதால் திராட்சை பயிரிட்ட விவசாயிகள் மகிழ்ச்சி அடைந் துள்ளனர், என்று கூறினர்.

Tags

Next Story