புல் மைதானத்திற்குள் நுழைய தடை, சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் !

நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசுத் தாவரவியல் பூங்காவில் உள்ள புல் மைதானம் ஒருவாரமாக மூடப்பட்டுள்ளது.
ஊட்டியில் உள்ள படகு இல்லம், ரோஜா பூங்கா, மரவியல் பூங்கா, அரசுத் தாவரவியல் பூங்கா உட்பட பல்வேறு சுற்றுலாத்தளங்களுக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். கோடை சீஸனான ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் இங்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் பூங்காவை தயார் செய்யும் பணிகளில் தோட்டக்கலைத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதன் ஒரு பகுதியாக, பூங்காவில் உள்ள புல் மைதான சீரமைப்பு மற்றும் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியின் காரணமாக புல் மைதானங்கள் மூடப்பட்டு, புல் மைதானத்திற்குள் நுழைய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், பூங்காவிற்கு வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். தொடர்ந்து நடைபெறும் பராமரிப்பு பணிகளால் புல் மைதானம் கோடை விழாவின் போது தான் சுற்றுலாப் பயணிகள் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags

Next Story